Last Updated:

Donald Trump | அமெரிக்காவில் நடந்த இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

Trump

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்போம் என்றும், அமெரிக்காவுக்கே என்றும் முதலிடம் என்றும் அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகப் பதவியேற்ற பின் உரையாற்றிய அதிபர் டிரம்ப், அமெரிக்கா இதுவரை இல்லாத வகையில் வளர்ந்ததாகவும், முன்னேற்றமடைந்ததாகவும் மாறும் என்று கூறினார். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற தான் கடவுளால் காப்பாற்றப்பட்டதாகக் கூறிய டிரம்ப், இதுவரை இல்லாத அளவில் வலுவானதாக அமெரிக்கா மாறும் என்றும், பொற்காலம் தொடங்கிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் நடந்த இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

முதல் உத்தரவு

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதும் முதல் உத்தரவாக, நாட்டின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். எல்லையில் ஆயுதமேந்திய ராணுவ வீரர்களை நிலைநிறுத்தவும், மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாகப் புகலிடம் தேடி வருபவர்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார்.

மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா என்று அழைக்கப்படும் என்றும், பனாமா கால்வாய் மீட்டெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அமைதியை நிலைநாட்டுவதற்காகப் பாடுபடுவேன் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

அதேபோல், பணவீக்கம் மற்றும் எரிசக்தி விலைகளைக் கட்டுக்குள் வைக்கும் வகையில், தேசிய எரிசக்தி அவசரநிலையை அதிபர் டிரம்ப் அறிவித்தார். நாட்டின் எரிசக்தி உற்பத்தி மீட்டெடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

Also Read | Donald Trump: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்..!

அமெரிக்காவில் ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மற்ற நாடுகளை வளப்படுத்த அமெரிக்கக் குடிமக்களுக்கு வரி விதிக்காமல், நமது குடிமக்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிப்போம் என்றார். அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும், பேச்சுரிமைக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

இவை அனைத்தும் அவரின் தேர்தல் பிரச்சாரத்திலேயே கொள்கைகளாக முன்வைக்கப்பட்டன. அதனைத் தற்போது அமல்படுத்தத் தொடங்கியுள்ளார்.



Source link