Last Updated:
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் – காமெடி படமாக இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ (DD Next Level) என்ற பெயரில் உருவாகியுள்ளது.
இதையும் வாசிக்க: Vidaamuyarchi : விடாமுயற்சி படத்தின் அப்டேட்.. தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது முன்னணி நிறுவனம்..
இந்தப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி பீப்பிள் ஷோ, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
January 21, 2025 6:43 AM IST