Last Updated:

நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி நெக்ஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

News18

நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் – காமெடி படமாக இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ (DD Next level) என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி பீப்பிள் ஷோ, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பொறுத்தவரை நீண்ட எலும்பு ஒன்றின் மீது கைவைத்துக்கொண்டும், மண்டை ஓட்டின் மீது காலை வைத்துக்கொண்டும் சந்தானம் அமர்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் உள்ள போட்டோ பிரேமில் துப்பாக்கியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.



Source link