Last Updated:

சமீபத்தில் விமான நிலைய பணியாளருடன் விநாயகன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று கோவாவில் பொதுமக்கள் அதிகம் கூடிய தெருவில் விநாயகன் கூக்குரல் எழுப்பி பொதுமக்களுக்கு அசௌரியத்தை ஏற்படுத்தினார்

News18

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன் தனது பக்கத்து வீட்டு நபரை ஆபாச வார்த்தைகளால் சரமாரியாக திட்டி தீர்த்துள்ளார். அவர் மீது தகுந்த எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மலையாள சினிமாவில் கேரக்டர் ஆர்டிஸ்டாக இருந்தவர் விநாயகன். இவரது அபாரமான நடிப்பு திறமையால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக தமிழில் வெளியான ஜெயிலர் படத்தில் அவர் வர்மா என்ற வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரும் வரவேற்பை கொடுத்தது.

தொடர்ந்து அவரை வில்லனாக படத்தில் சேர்ப்பதற்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். படத்தில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையிலும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நபராக விநாயகன் உள்ளார்.

சமீபத்தில் விமான நிலைய பணியாளருடன் விநாயகன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று கோவாவில் பொதுமக்கள் அதிகம் கூடிய தெருவில் விநாயகன் கூக்குரல் எழுப்பி பொதுமக்களுக்கு அசௌரியத்தை ஏற்படுத்தினார். மனைவியிடம் சண்டையிட்ட புகாரினபேரில் போலீசார் அவர் மீது சில மாதங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதையும் படிங்க -Ajith | 20 ஆண்டுகள்…ஒரே மாதம்..அஜித் – த்ரிஷா காம்போ நிகழ்த்திய ஆச்சரியம்..என்ன தெரியுமா?

இந்த நிலையில் விநாயகன் மொட்டை மாடியில் நின்று கொண்டு இடுப்பில் வேஷ்டி மட்டுமே கட்டிக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரரை சரமாரியாக திட்டத்தை தீர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒரு கட்டத்தில் அவரால் தரையில் அமர்ந்து கொண்டு எழுந்திருக்க முடியாமல் தள்ளாடுகிறார்.

அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளார்கள். இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன் என விநாயகன் தெரிவித்துள்ளார். அடுத்ததாக அவர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.





Source link