Last Updated:

சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் ஏற்கனவே ஆம்பள, ஆக்சன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

News18

இயக்குனர் சுந்தர்.சி உடனான மாயாஜால கூட்டணி மீண்டும் அமைய காத்திருக்கிறேன் என விஷால் தெரிவித்துள்ளார்

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு கழித்து வெளியான மதகஜராஜா திரைப்படம் பெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்த நிலையில் சுந்தர்.சி தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இதற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருக்கும் விஷால், ஒரு நடிகராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக வாழ்த்துவதாக கூறியுள்ளார்.  அது மட்டும் இல்லாமல் எனக்கு சிறந்த வெற்றியை கொடுத்த உங்களுக்கு நன்றி என்றும் கூறியிருக்கிறார்.

உங்களுடன் மகிழ்ச்சியான சூழலில் பணியாற்ற எப்போதும் விரும்புவேன். இந்த ஆண்டை பிளாக்பஸ்டர் வெற்றியுடன் தொடங்கி இருக்கிறீர்கள். இந்த மாயாஜால கூட்டணியுடன் மீண்டும் திரையில் இணைவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என விஷால் பதிவிட்டு இருக்கிறார்.

சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் ஏற்கனவே ஆம்பள, ஆக்சன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது அவர்களின் முதல் கூட்டணியான மதகஜராஜா படம் வெளியாகி வெற்றி அடைந்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் இருவரும் நான்காவது முறையாக இணைய திட்டமிட்டு வருகின்றனர்.

12 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகி உள்ள மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே அதிக வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. அதிக காமெடி காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான படமாக மதகஜராஜா படத்தை சுந்தர் சி வழங்கி இருந்தார்.

இந்த படத்தில் விஷால், சந்தானம், மனோபாலா இடம்பெறும் காமெடி காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தன. கடந்த சில ஆண்டுகளாக சிறந்த காமெடி படங்கள் தியேட்டர்களில் வெளியாகாத சூழலில் சரியான நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட மதகஜராஜா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

இதையும் படிங்க – Ilavarasu | “இன்றைக்கு திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிப்பதே சாதனை தான்” – இளவரசு ஓப்பன் டாக்

12 ஆண்டுகளுக்கு பின்னர் ரிலீஸ் செய்தாலும் படம் தரமாக இருந்தால் வெற்றி பெறும் என்பதற்கு மதகஜராஜா உதாரணமாக அமைந்துள்ளது. இந்த படத்துடைய வெற்றியால் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ள துருவ நட்சத்திரம் உள்ளிட்ட விரைவில் திரைக்கு கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Source link