Last Updated:
Giant Stingray: மீனவர் வலையில் சிக்கிய பிரம்மாண்ட மீனைக் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
வங்கக் கரையோரம் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதானத் தொழிலாக மீன்பிடித் தொழிலிருந்து வருகிறது. திரேஸ்புரம், வேம்பார், தருவைகுளம், பெரிய தாழை உள்ளிட்ட பல பகுதிகளில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை மீனவ கிராமத்தில் 600க்கு மேற்பட்ட பைபர் படகில் மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் ஜோசப் என்பவரது பைபர் படகில் 5 பேர் கொண்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்த நிலையில் கடலில் வழக்கம்போல் வலையில் விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு டன் எடை கொண்ட கொம்பு திருக்கை மீன் அந்த வலையில் மாட்டியது. இந்த நிலையில் வலையுடன் பைபர் படகில் கயிறு கட்டி அந்த மீனைக் கடற்கரை ஓரத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: Hethai Amman Festival: ஜெகதளா ஹெத்தையம்மன் திருவிழா… நடனமாடி மகிழ்ந்த 6 கிராம மக்கள்…
பின்னர் அதை டிராக்டர் வண்டி மூலம் கடற்கரையிலிருந்து வெளியே கொண்டு வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு ஏலம் விடப்பட்டது. இந்த ஒரு டன் எடையுள்ள கொம்பு திருக்கை மீன் 56 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்திற்குப் போனது. ஒரு டன் எடை கொண்ட மீன் அந்த கிராம மக்கள் பார்த்ததும் ஆச்சரியத்துடன் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
January 21, 2025 4:46 PM IST