Last Updated:

கடந்த 20 ஆண்டுகளாக அஜித் – த்ரிஷா காம்போவில் உருவான படங்கள் ஒரே மாதத்தில் வெளியான சுவாரஸ்ய தகவல் தெரியுமா? அது குறித்து விரிவாக பார்ப்போம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் படம் இந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக அஜித் – த்ரிஷா காம்போவில் உருவான படங்கள் ஒரே மாதத்தில் வெளியான சுவாரஸ்ய தகவல் தெரியுமா? அது குறித்து விரிவாக பார்ப்போம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் – த்ரிஷா நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் படம் பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி பிப்.6 படம் வெளியாகிறது.

லிங்குசாமி இயக்கத்தில் அஜித், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘ஜி’. இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்தார். இந்தப் படத்தை 2005-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் படம் திட்டமிட்டபடி வெளியிட முடியாததால், ரிலீஸ் தேதியை பிப்ரவரிக்கு தள்ளிவைத்தனர். அதன்படி பிப். 11-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.

இதையும் வாசிக்க: Siragadikka Aasai | இனி தப்பிக்கவே முடியாது ரோகிணி.. மலேஷியாவுக்கே செல்ல திட்டம்போடும் முத்து..!

2005-ம் ஆண்டு ‘ஜி’ படம் வெளியான 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2015-ல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் – த்ரிஷா நடிப்பில் உருவான படம் ‘என்னை அறிந்தால்’. இந்தப் படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டனர். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதனால் படம் பிப்ரவரி 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தற்போது சரியாக 10 ஆண்டுகள் கழித்து அதேபோல அஜித் – த்ரிஷா நடித்துள்ள ‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு திட்டமிடப்பட்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த ஒற்றுமையும், சுவாரஸ்யமான தகவல்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.



Source link