Last Updated:

Poultry Farm Subsidy: நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விரும்புபவர்களுக்குத் தமிழ்நாடு அரசு 50% வரை மானிய உதவி செய்கிறது.

ரூ.1.47 லட்சம் மானியம்… 250 கோழிக்குஞ்சுகள் இலவசம்… கோழிப்பண்ணை அமைக்க அரசின் உதவி…

சிறிய அளவில் மற்றும் 100 நாட்டுக்கோழிப் பண்ணை வைத்து தொழிலைத் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்குத் தமிழ்நாடு அரசு தரப்பில் 50% மானியம் வழங்கப்படுகிறது. இது கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பயனடையும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 2022 – 2023ஆம் நிதியாண்டில் ரூபாய் 180 இலட்சம் செலவில், சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக் கோழிப்பண்ணை அலகுகள், 50 சதவிகித மானியத்தில் அரியலூர், கடலூர், பெரம்பலூர், இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ளது.

இத்திட்டத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, 2023-24ஆம் நிதியாண்டில் மீதமுள்ள 26 மாவட்டங்களில் (சென்னை (ம) நீலகிரி நீங்கலாக) சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் ரூபாய் 180 இலட்சம் செலவில் 50 சதவிகித மானியத்தில் உள்ளது.

இதையும் படிங்க: Swamithoppu Pathi: சாமித்தோப்பு அய்யா கோவில் தை திருவிழா… கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது…

2024-25 ஆம் ஆண்டில், சென்னை மற்றும் நீலகிரி நீங்கலாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 100 எண்ணிக்கையிலான (250 கோழிகள்/ அலகு) நாட்டுக் கோழிப்பண்ணை அலகுகள் 50 சதவிகித மானியத்தில் (ரூ.1,47,740) மாநில அரசால் நிறுவப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக் கோழிக் குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடைப் பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. முட்டைகள், குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலமும், வளர்ந்த பெண் கோழிகள் (ம) சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்தும், ஒரு பயனாளி வருடத்திற்கு ரூ. 2,31, 000 வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link