Last Updated:
2025ல் அடுத்த ஐபோன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. ஆனால் அதற்கான எதிர்பார்ப்பு பயங்கரமாக உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் போனை அறிமுகப்படுத்தியது அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால், வாக்குறுதி அளித்தபடி போனின் பெரும்பகுதி சிறப்பம்சங்கள், முதல் நாளிலிருந்து கிடைக்காத நிலையில், 2025ம் ஆண்டில் பெரிய அறிமுகங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் மேக்ஸ் (Macs), ஐபேட்கள் (iPads) மற்றும் ஐபோன்கள் கூட அடங்கும்.
இந்த ஆண்டு வரவிருக்கும் அற்புதமான மேம்படுத்தப்பட்ட ஐபோன் மாடல்கள் குறித்த வதந்திகளால் ஆப்பிள் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக, 2025ம் ஆண்டில் ஐந்து புதிய ஐபோன்களைப் பார்க்க உள்ளோம். மேலும் ஆப்பிள் நிறுவனம், அதன் போன் வரிசையில் சில மாற்றங்களைச் செய்யலாம் என்றும் அதிக லாபம் ஈட்டும் வகையில் உயர் பிரிவில் புத்துணர்ச்சியூட்டும் வகையில் கவனம் செலுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2025-ல் அறிமுகப்படுத்தப்படும் ஐந்து ஐபோன்கள்:
ஐபோன் SE 4/ஐபோன் 16E
முதல் பெரிய ஐபோன் வெளியீடாக புதிய ஐபோன் SE 4 மாடலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இணையத்தில் வலம் வரும் சில வதந்திகள் உண்மையென்றால், 16 சீரிஸ் போனின் ஒரு பகுதியாக புதிய ஐபோன் 16E என்ற புதிய பெயரில் வரலாம் என்று கூறப்படுகிறது. SE மாடல்கள் பல ஆண்டுகளாக ஏமாற்றி வரும்நிலையில், 2025ம் ஆண்டில் அவை ஃபேஸ் ஐடி (குட்பை டச் ஐடி) ஆதரவுடன் நவீனமாக இருப்பதைக் காணலாம். மேலும், ஆப்பிளில் இருந்து புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களையும் பெறலாம். பட்ஜெட் ஐபோனான இதில், ஒரு பின்பக்க கேமரா இருக்கும். இதன் விலை $600 (தோராயமாக ரூ.48,600) இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ஐபோன் 17
2025ல் அடுத்த ஐபோன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. ஆனால் அதற்கான எதிர்பார்ப்பு பயங்கரமாக உள்ளது. ஐபோன் 17 ஆனது ஹை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் கூடிய ப்ரோமோஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி செயல்திறனில் புதிய உயரங்களை அடைய புரோ போன்ற சிப்செட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை அம்சங்கள் நிறைந்த ஐபோன் மாடலில் புதிய ஹார்டுவேர் மாற்றங்களையும் ஆப்பிள் செய்யலாம். அதே சமயம் கேமரா மேம்படுத்தல்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.
ஐபோன் 17 ஸ்லிம்/ஏர்
ஆம், ஆப்பிள் ஐபோன் பிளஸ் தனது பயணத்தை முடித்துக் கொள்ளலாம். 2025ம் ஆண்டிலிருந்து புதிய ஐபோன் ஸ்லிம் அல்லது ஏர் மாடலை சேர்க்கலாம் என்று செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஸ்லிம் வேரியண்டில், அதன் 5.5 மிமீ பரிமாணங்களின் காரணமாக ஒற்றை பின்புற கேமராவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பேட்டரி அளவும் குறையக்கூடும். ஆப்பிளின் மிக மெல்லிய இந்த ஐபோனின் விலை ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கலாம்.
ஐபோன் 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ்
இறுதியாக, புரோ மேக்ஸ் மாடல் உட்பட ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் வரவுள்ளன. இந்த ஐபோன்கள் ஒரு புதிய டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தைப் பெற வேண்டும். பெரிஸ்கோப் லென்ஸுடன் கேமராக்களும் உச்சத்தை தொடும். இந்த மேம்படுத்தல்கள் ஐபோன் 17 ப்ரோ வேரியண்டுகளின் ஆரம்ப விலையை நிச்சயமாக உயர்த்தும்.
January 21, 2025 7:13 PM IST