Last Updated:

டாக்ஸிக் படத்தை நடிகர் யாஷ் மற்றும் கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்துடைய டீசர் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன

News18

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படத்தின் ஹீரோ யாஷ் தற்போது டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது நூற்றுக்கணக்கான மரங்களை சட்ட விரோதமாக வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு கர்நாடகா அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கன்னட நடிகரான யாஷ் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த கே.ஜி.எஃப் என்ற திரைப்படம் நாடு முழுவதும் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து வந்த அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படம் 1100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றியின் காரணமாக யாஷின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. தற்போது அவர் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மலையாளத்தில் நடிகையாக இருந்த கீது மோகன்தாஸ் என்பவர் இயக்கி வருகிறார்.

தற்போது இந்த படத்துடைய ஷூட்டிங் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது பெங்களூருவில் உள்ள வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது என புகார்கள் எழுந்துள்ளன.

இதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. படக்குழுவினர் இந்த நோட்டீஸிற்கு அளிக்கும் பதிலை பொறுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இதே போன்று நடந்த விதிமீறலின் போது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்தரே உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிங்க – Vinayakan : ஜெயிலர் பட வில்லன் செய்த மோசமான காரியம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

டாக்ஸிக் படத்தை நடிகர் யாஷ் மற்றும் கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்துடைய டீசர் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. கோவாவை மையப்படுத்தி போதைப்பொருள் கும்பல் தொடர்பான கதையாக டாக்ஸிக் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த ஆண்டு இறுதியில் டாக்ஸிக் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Source link