Last Updated:
முதல் பாகத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இடம்பெற்ற காட்சிகள் மிக பெரும் வரவேற்பை பெற்றது.
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் சிவராஜ் குமாருக்கு பதிலாக இடம் பெறும் நடிகர் யார் என்பது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரஜினிகாந்தின் சினிமா கெரியரில் 2.0 படத்துக்கு அடுத்தபடியாக மிகப் பெரும் வெற்றியை ஜெயிலர் திரைப்படம் கொடுத்தது. இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக அட்டகாசமான நடிப்பை ரஜினிகாந்த் வெளிப்படுத்தி இருந்தார்.
பீஸ்ட் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்துடைய இயக்குனர் நெல்சன் திலிப் குமார் ஜெயிலர் படத்தின் மூலமாக அதிரடி கம்பேக்கை கொடுத்தார். இந்த திரைப்படம் 650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால், யோகி பாபு உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் படத்துடைய இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டது. முதல் பாகத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இடம்பெற்ற காட்சிகள் மிக பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் அவர் கேன்சர் பாதிப்பு காரணமாக இரண்டாவது பாகத்தில் நடிக்க முடியாத சூழலில் உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா ஜெயிலர் 2 திரைப்படத்தில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க – Vinayakan : ஜெயிலர் பட வில்லன் செய்த மோசமான காரியம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
பாலகிருஷ்ணாவுக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் அவர் படத்தில் இடம்பெற்றால் படம் கூடுதல் சுவாரசியமாக இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
January 21, 2025 10:41 PM IST