Last Updated:
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜேனரில் உருவான இந்த திரைப்படம் விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்தை கொண்டுள்ளது.
நடிகர் சரத்குமாரின் 150ஆவது படமான தி ஸ்மைல் மேன் என்ற படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் சீனியர் நடிகராக வலம் வரும் நடிகர் சரத்குமார் நடிப்பில் அவரது 150ஆவது திரைப்படமாக தி ஸ்மைல் மேன் என்ற படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெளியானது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் நடித்துவரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்துள்ளனர்.
70 வயதை கடந்த போதிலும் சரத்குமார் தனது உடலை மிகவும் ஃபிட்டாக வைத்துக் கொண்டு உடற்பயிற்சி மேற்கொள்ளும் பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். இவருடைய 150ஆவது திரைப்படமான ஸ்மைல் மேன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ஒரு முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு காவல்துறை முன்னாள் அதிகாரி ஆளாகிறார். ஆனால் அவருக்கு அம்னீசியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் மறதி உண்டாகிறது.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜேனரில் உருவான இந்த திரைப்படம் விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்தை கொண்டுள்ளது. தி ஸ்மைல் மேன் படத்தில் சரத்குமாருடன் இனியா, ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், வெற்றி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.
January 21, 2025 10:17 PM IST