Last Updated:
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதனை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.
மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4-ஆவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய மூத்த வீரர்கள் ரன் எடுக்கத் தவறினாலும், நிதிஷ் குமார் ரெட்டி சதமடித்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.
ஒரு கட்டத்தில் 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது 8-வது வீரராக 21 வயதான நிதிஷ்குமார் ரெட்டி களமிறங்கினார். இக்கட்டான நிலையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்களை குவித்த நிதிஷ் குமார், ‘புஷ்பா’ பட பாணியில், அதனை கொண்டாடினார்.
இதையும் படிக்க: நிதீஷ் குமார் ரெட்டியின் சதம்..! கண்ணீர் விட்டு கொண்டாடிய தந்தை
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதனை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். சதம் எடுக்க ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நேரத்தில், நிதிஷ்குமாரின் தந்தை கண்களை மூடி வேண்டிக்கொண்டிருந்த புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இதையடுத்து, நான்காவது நாள் ஆட்டத்தில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது நிதிஷ்குமார் ரெட்டி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் டெஸ்ட் சதத்தை இளம் வயதில் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் நிதிஷ்குமார் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்பு, 18 வயதில் சச்சினும், 21 வயதில் ரிஷப் பண்டும் இந்த சாதனையை செய்தனர்.
Also Read: ക്രിക്കറ്റ് താരം നിതീഷ് കുമാര് റെഡ്ഡി തിരുപ്പതി ക്ഷേത്രത്തിലേക്കുള്ള പടികൾ കയറിയത് മുട്ടിലിഴഞ്ഞ്
இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, தற்போது வரை 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
December 29, 2024 8:55 AM IST