Last Updated:
துருக்கியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 76 பேர் உயிரிழந்தனர்.
துருக்கியின் பொலு மாகாணத்தில் அமைந்துள்ள கர்தல்கயா ரிசார்ட் பகுதியில் கிரான்ட் கர்த்தால் என்ற பெயரில் 12வது மாடி ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இங்கு, 238 பேர் தங்கியிருந்தனர். நேற்று அதிகாலை ஹோட்டலின் கூரை மற்றும் 12ஆவது மாடியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது மற்ற தளங்களுக்கும் பரவியது.
இதனால், அறைகளில் தங்கியிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அறையில் தங்கியிருந்த மூவர் தீயில் சிக்காமல் இருக்க மாடியில் இருந்து கீழே குதித்தபோது உயிரிழந்தனர். தீக்காயம், மூச்சுத் திணறல் என 76 பேர் உயிரிழந்தனர். சிலர் அட்டைகள் மற்றும் போர்வைகளை பயன்படுத்தி கீழே குதித்து தப்பினர். காயமடைந்த 50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவிவருகிறது.
32 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 22, 2025 7:01 AM IST