Last Updated:

மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்டில் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ரெட்டி பெற்றுள்ளார்.

நிதீஷ் குமார் ரெட்டியின் தந்தை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், ஆந்திராவைச் சேர்ந்த 21 வயதான நிதீஷ் குமார் ரெட்டி தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4-ஆவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய மூத்த வீரர்கள் ரன் எடுக்க தவறினாலும், நிதீஷ் குமார் ரெட்டி சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நிதீஷ் குமார் ரெட்டியின் தந்தை முத்யால ரெட்டி தனது மகனின் சாதனையை நேரில் கண்டு ஆனந்த கண்ணீர் விட்டார். இந்த நெகிழ்ச்சியான தருணம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிக்க: தடுமாறிய இந்தியா..! சரிவிலிருந்து மீட்ட இளம் வீரர்கள் – 3ஆம் நாள் ஆட்டம் எப்படி?

போட்டிக்குப் பின்னர் பேசிய முத்யால ரெட்டி, “இன்று ஒரு சிறப்பான தருணம். மறக்க முடியாத நாள்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் (18 வயது, 256 நாட்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (21 வயது, 92 நாட்கள்) ஆகியோருக்குப் பிறகு, 21 வயது மற்றும் 216 நாட்களில் ரெட்டி மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரிஷப் பண்ட்.

மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டில் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ரெட்டி பெற்றுள்ளார். வீரேந்திர சேவாக் (2003), விராட் கோலி (2014), அஜிங்க்யா ரஹானே (2014, 2020) மற்றும் சேதேஷ்வர் புஜாரா (2018) ஆகியோரும் இதற்கு முன்பு மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் 221 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, நிதீஷ் ரெட்டி – வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பார்ட்னர்ஷிப்பால், இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது. மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை சேர்த்தது.

Also Read: ക്രിക്കറ്റ് താരം നിതീഷ് കുമാര്‍ റെഡ്ഡി തിരുപ്പതി ക്ഷേത്രത്തിലേക്കുള്ള പടികൾ കയറിയത് മുട്ടിലിഴഞ്ഞ്





Source link