Last Updated:
தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வால்வோர்ட் 773 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இலங்கை அணியின் சமாரி அதப்பட்டு 733 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பேட்டிங் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் நுழைந்த ஒரே இந்திய வீராங்கனை என்ற ரிக்கார்டை ஸ்மிருதி மந்தனா ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்டராக இடதுகை வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கடந்த சில மாதங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி . அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் அவர் 3-ஆவது போட்டியில் 135 ரன்கள் குவித்தார்.
முதல் போட்டியில் 41 ரன்களும் இரண்டாவது போட்டியில் 73 ரன்களும் எடுத்திருந்தார். இதன் அடிப்படையில் ஐசிசி தரவரிசை பட்டியலில் அவருக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஸ்மிருதி மந்தனா 738 புள்ளிகளுடன் ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் பேட்டர்கள் தரவரிசையில் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வால்வோர்ட் 773 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இலங்கை அணியின் சமாரி அதப்பட்டு 733 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ஸ்மிருதி மந்தனாவை தவிர்த்து இந்திய அணியின் பேட்டர் ஜெனிமா ரோட்ரிகஸ் ஐசிசி தரவரிசையில் 17வது இடத்தை பிடித்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் சதம் அடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 15 வது இடத்தில் உள்ளார். இதேபோன்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 344 புள்ளிகளுடன் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
January 22, 2025 9:56 AM IST