Last Updated:

Champions Trophy | பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட மறுத்ததால் இத்தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Team India

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணி அணியும் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை பொறிக்க பிசிசிஐ மறுத்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் பெயர் பொறித்த ஜெர்சியை இந்திய அணி அணிய மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியாக நடக்கவுள்ளது. இம்முறை பாகிஸ்தானில் தொடர் நடக்கவுள்ள நிலையில் இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என ஆரம்பம் முதலே கேள்வி எழுந்தது.

அந்த வகையில் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட மறுத்ததால் இத்தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடக்கவுள்ள தொடரின் தொடக்க விழாவிலும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

Also Read | சீட்டுக்கட்டு போல் சரிந்த கனவு வீடு.. நிர்கதியாய் நிற்கும் குடும்பங்கள்: கண்ணிமைக்கும் நேரத்தில் கோவையில் நடந்த சோகம்!

இந்நிலையில் இத்தொடருக்கான ஜெர்சி தொடர்பாகவும் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் பாகிஸ்தானின் பெயர் ஜெர்சியில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து இந்திய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Source link