Last Updated:
BSNL | நாம் இங்கே பார்க்கப்போகும் ரீசார்ஜ் பிளான் ரூ.439 என்ற விலையில் கிடைக்கும் பிஎஸ்என்எல்-ன் STV, அதாவது ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் பிளான் ஆகும். BSNL-ன் இந்த பிளான் மூலம் யூஸர்களுக்கு வழங்கப்படும் நன்மைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான BSNL, இந்தியாவில் அதன் ப்ரீபெய்ட் யூஸர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு ப்ரீபெய்ட் பிளானை வழங்குகிறது.
அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா பேலன்ஸ் தேவையில்லாத பிளானை ரீசார்ஜ் செய்ய விரும்புவோருக்கு நாம் தற்போது பார்க்கப் போகும் BSNL ரீசார்ஜ் பிளான் பொருத்தமானதாக இருக்கும். யூஸர்கள் தங்கள் சிம்மை ஆக்டிவாக வைத்திருக்கவும், நிறுவனம் வழங்கும் அடிப்படை நன்மைகளைப் பெறவும் இந்த பிளானை ஒரு BSNL யூஸர் ரீசார்ஜ் செய்யலாம்.
BSNL நிறுவனத்தின் இந்த பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மலிவு விலை ப்ரீபெய்ட் பிளான் ஆகும் மற்றும் ரூ.450க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. ஆம்… நாம் இங்கே பார்க்கப்போகும் ரீசார்ஜ் பிளான் ரூ.439 என்ற விலையில் கிடைக்கும் பிஎஸ்என்எல்-ன் STV, அதாவது ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் பிளான் ஆகும். BSNL-ன் இந்த பிளான் மூலம் யூஸர்களுக்கு வழங்கப்படும் நன்மைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
Also Read: Chennai Gold Rate 17th Jan | நகைப்பிரியர்களுக்கு ஷாக் தரும் தங்கம் விலை.. பத்தே நாட்களில் இவ்வளவு உயர்வா?
BSNL STV 439 அல்லது ரூ.439 ப்ரீபெய்ட் பிளான்:
ரூ.439 என்ற விலையில் கிடைக்கும் BSNL-ன் இந்த 90 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டி ப்ரீபெய்ட் பிளானானது பிஎஸ்என்எல் யூஸர்களுக்கு அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் வேலிடிட்டி பீரியட் முழுவதற்கும் 300 இலவச SMS-களை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் பிளானில் டேட்டா பெனிஃபிட்ஸ் எதுவும் இல்லை. ஆனால், யூஸர்கள் தங்களுக்கு டேட்டா தேவைப்படும் போதெல்லாம் மலிவு விலை டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். சுருக்கமாக சொன்னால் BSNL வழங்கும் இந்த பிளான் ஒரு வாய்ஸ் வவுச்சர் ஆகும்.
பெரிதாக டேட்டா எதுவும் தேவையில்லாமல் வாய்ஸ் கால்ஸ் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் யூஸர்கள் மற்றும் இந்த நன்மையுடன் தங்கள் வேலிடிட்டி நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று விரும்பும் யூஸர்களுக்கு இந்த பிளான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தவிர தங்கள் BSNL சிம்மை ஆக்டிவாக வைத்திருக்க விரும்பும் டூயல் சிம் யூஸர்களுக்கும் இந்த பிளான் ஒரு நல்ல விருப்பமாக இருக்கும்.
தற்போதைய நிலவரப்படி எந்த தனியார் டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இவ்வளவு மலிவு விலையில் 90 நாட்கள் ப்ரீபெய்ட் வேலிடிட்டி பிளானை அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இத்தகைய மலிவு விலை பிளான்கள் காரணமாக, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர் தளத்தை விட புதிய வயர்லெஸ் வாடிக்கையாளர்களை BSNL சேர்க்க முடிந்துள்ளது.
இதையும் படிக்க: Gold rate today: மீண்டும் 59,000 ரூபாயை தாண்டிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்திய சந்தையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியவுடன், தொலைத்தொடர்பு சந்தையில் இது பெரிய மாற்றங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
January 16, 2025 11:30 AM IST