Last Updated:
ரிஷப் பண்ட் 28 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் அவுட் ஆக, இந்திய அணி 221 ரன்னுக்கு 7 விக்கெட்களை பறிகொடுத்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி சதம் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4-ஆவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்களை இழந்து இந்தியா 164 எடுத்திருந்தது.
இந்த நிலையில், 3-வது நாளைத் தொடங்கிய இந்திய அணியில் ஆரம்பம் முதலே தடுமாறத் தொடங்கியது. ரிஷப் பண்ட் 28 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் அவுட் ஆக, 221 ரன்களுக்கு 7 விக்கெட்களைப் பறிகொடுத்தது. இதனையடுத்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோரின் அருமையான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி மீண்டது.
இதையும் படிக்க: “நம்பவில்லை என்றால் ஏன் அணியில் சேர்க்கிறீர்கள்?” – ரவி சாஸ்திரி ஆவேசம்
வாஷிங்டன் சுந்தர் பொறுப்பாக விளையாடி அரைசதமடிக்க, மறுமுனையில் நிதீஷ் குமார் ரெட்டி சதமடித்தார். இதனால் இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 116 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இந்திய அணி நாளை மீண்டும் பேட்டிங்கைத் தொடங்கும்.
தொடர்ந்து மூத்த வீரர்கள் ரன்களை குவிக்கத் தவறினாலும், இளம் வீரர்கள் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளனர்.
December 28, 2024 6:29 PM IST