Last Updated:
OTT Spot |கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை காமெடியாக சித்தரிக்கும் புதிய வெப்சீரிஸ் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதற்கான டைட்டில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை காமெடியாக சித்தரிக்கும் புதிய வெப்சீரிஸ் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதற்கான டைட்டில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஹார்ட் பீட்’ வெப்சீரிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து விரைவில் புதிய வெப்சீரிஸ் ஒன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. ‘ஆஃபீஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில், ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் நடித்த நடிகர்கள் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் இந்த சீரிஸில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா ஆகியோருடன் அரவிந்த், “பிராங்க்ஸ்டர்” ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர். ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நகைச்சுவையுடன் கூடிய இந்த சீரிஸை, கபீஷ் இயக்கியுள்ளார், ஜெகந்நாத் தயாரித்துள்ளார். இந்நிலையில் இதன் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை ஃப்ளூட் நவீன் இசையில், முகேஷ் பாடியுள்ளார்.
ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ள தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் இந்த தொடரின் மையக்கதை. காமெடியான உருவாகியுள்ள இந்த தொடர் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
January 22, 2025 2:38 PM IST