பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது தற்போது 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும் ஒரு சிறந்த சிறு சேமிப்புத் திட்டமாகும். சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் என இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய இந்த திட்டம் அனுமதிக்கிறது.

பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நீண்ட கால ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் 1968ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது. மேலும், 1961ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டப் பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளுடன், பிபிஎஃப் பயனர்களுக்கு ஒரு நம்பமான உத்தரவாதத்தை வழங்குகிறது. இது முதலீட்டாளர்களுக்கு ஆபத்து இல்லாத கவர்ச்சிகரமான தேர்வாக இருக்கிறது.

தனிநபர்கள் இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதலீட்டில், தபால் அலுவலகம் அல்லது வங்கியில் பிபிஎஃப் கணக்கைத் திறக்கலாம். மேலும், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதன் மூலம், ஒரு நபர் மாதம் ரூ.1,06,828 வரையிலான வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்த விரிவான தகவலை இங்கே பார்ப்போம்.

பிபிஎஃப் என்றால் என்ன?

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) என்பது ஓய்வூதியத்தை மையமாகக் கொண்ட, இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு பிரபலமான நிலையான சிறுசேமிப்புத் திட்டமாகும். பாதுகாப்பான மற்றும் நம்பகமான நீண்ட கால சேமிப்புக்கு இது ஒரு சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. இது வருமான வரிச் சட்டம், 1961இன் பிரிவு 80C-இன் கீழ் தனிநபர்களுக்கு உத்தரவாதமான வருமானம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்குகிறது. இந்த சிறு சேமிப்புத் திட்டம் சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் உட்பட அனைத்து தனிநபர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது.

வைப்புத் தொகை வரம்பு

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.500 மற்றும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

முதிர்வு காலம்

பிபிஎஃப் முதலீடானது, 15 ஆண்டுகள் ஆரம்ப லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கை மேலும் 5 ஆண்டுகள் என வரம்பற்ற முறையில் நீட்டிக்கலாம்.

முதிர்வு காலத்திற்கு முன் பிபிஎஃப் தொகையை எடுக்க முடியுமா?

பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நிதியாண்டில் 1 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

எவ்வளவு பணம் எடுக்கலாம்?

4வது ஆண்டின் இறுதியில் அல்லது முந்தைய ஆண்டின் இறுதியில், அதில் எது குறைவாக இருக்கிறதோ, அதிலிருந்து அந்த நேரத்தில் கிரெடிட்டில் உள்ள இருப்பில் 50 சதவீதம் வரை எடுக்கலாம்.

பிபிஎஃப்-ல் இருந்து மாதம் ரூ.1,06,828 வருமானம் பெறுவது எப்படி?

பிபிஎஃப்-ல் இருந்து மாதம் ரூ.1,06,828 வருமானம் ஈட்ட, ஒருவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.1.50 லட்சம் வீதம் 15 ஆண்டுகளுக்கு அதாவது, முதிர்வு காலம் வரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். மேலும், இதில் அதிகபட்ச வட்டியைப் பெற, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1 முதல் 5க்கு இடையில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.

இதையும் படிக்க: டிஜிட்டல் மோசடிகள்… அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை இவைதான்…!

மாதம் ரூ.1,06,828 ஈட்டுவதற்கான கணக்கீடுகள்:

15 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎஃப் முதலீடு என்னவாக இருக்கும்?

ஒருவர் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வீதம், 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில், 15வது ஆண்டின் இறுதியில் அவர் மொத்தமாக ரூ.22,50,000 முதலீடு செய்திருப்பார். அதன்படி, இதற்கான மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.18,18,209 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வுத் தொகை ரூ.40,68,209ஆகவும் இருக்கும். முதலீட்டாளர் கூடுதலாக 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து, முன்பு போலவே தொடர்ந்து வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யலாம்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎஃப் முதலீடு என்னவாக இருக்கும்?

இவ்வாறு 5 ஆண்டுகளை நீட்டிக்கும் பட்சத்தில், 20 ஆண்டுகளில், மொத்தமாக ரூ.30,00,000 முதலீடு செய்திருப்பார் என்றால், அதற்கான மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.36,58,288 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வுத் தொகை ரூ.66,58,288 ஆகவும் இருக்கும். இந்த நிலையில், முதலீட்டாளர் மேலும் 5 ஆண்டுகளை நீட்டித்து வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யலாம்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎஃப் முதலீடு என்னவாக இருக்கும்?

இவ்வாறு 5 ஆண்டுகளை நீட்டிக்கும் பட்சத்தில், 25 ஆண்டுகளில், முதலீட்டுத் தொகை மொத்தமாக ரூ.37,50,000ஆகவும், அதற்கான மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.65,58,015ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வுத் தொகை ரூ.1,03,08,015ஆகவும் இருக்கும்.

இதையும் படிக்க: PF Account transfer: PF கணக்கு பரிமாற்றத்திற்கு இனி முதலாளியின் அனுமதி தேவையில்லை; இப்படி மாற்றுங்கள்…! 

29 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎஃப் முதலீடு என்னவாக இருக்கும்?

29 ஆண்டுகளில், மொத்த முதலீட்டுத் தொகை ரூ.43,50,000ஆகவும், அதற்கான மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.99,26,621ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வுத் தொகை ரூ.1,42,76,621ஆகவும் இருக்கும்.

32 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎஃப் முதலீடு என்னவாக இருக்கும்?

32 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.48,00,000ஆகவும், அதற்கான மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.1,32,55,534ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வுத் தொகை ரூ.1,80,55,534ஆகவும் இருக்கும். இந்த கட்டத்தில், அவர்கள் தங்கள் முதலீட்டை நிறுத்த வேண்டும்.

32 வருட முதலீட்டிற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்?

தற்போது, முதலீட்டாளர்கள் முழு முதிர்வுத் தொகையில் இருந்தும் வட்டியை எடுக்கத் தொடங்கலாம். நீட்டிப்புகளின்போது, ​​கணக்கு வைத்திருப்பவர் வருடத்திற்கு ஒருமுறை வட்டித் தொகையை எடுக்க அனுமதிக்கப்படுவர்.

இதையும் படிக்க: தங்க நாணய முதலீடு: ஒவ்வொரு ஸ்மார்ட் முதலீட்டாளரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவைதான்…!

வட்டித் தொகை எவ்வளவு?

7.1 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு வருடத்தில் வட்டி ரூ.15,04,627ஆக இருக்கும், இது ஒரு மாதத்திற்கு ரூ.1,06,828க்கு சமமாக இருக்கும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

PPF: பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து மாதம் ரூ.1,06,828 வரி இல்லாத வருமானத்தைப் பெறுவது எப்படி?



Source link