அந்த வகையில், இந்த சூப்பர் காய்ன்களை பயன்படுத்தி ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனுக்கு சிறந்த சலுகைகளைப் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜி5, சோனி லைவ், ஜியோ சினிமா, ஆஹா உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களை மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் குறிப்பிட்ட ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனுக்கு பிளிப்கார்ட்டின் சூப்பர் காய்ன்களை பயன்படுத்தி சலுகைகளைப் பெற முடியும்.
பிளிப்கார்ட் சூப்பர் காய்ன்கள் மூலம், நீங்கள் இப்போது ஜி5, சோனி லைவ் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் தளங்களை இலவசமாகவோ அல்லது தள்ளுபடி விலையிலோ எளிதாக பெறலாம். ஓடிடி சந்தாக்களுக்கு பிளிப்கார்ட்டின் சூப்பர்காய்ன் ரிவார்டை பயன்படுத்துவதற்கான எளிய வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.
1. பிளிப்கார்ட் சூப்பர் காய்ன்
முதலில் பிளிப்கார்ட் ஆப் அல்லது இணையதளத்திற்கு சென்று, அதன் முகப்புப் பக்கத்தில் இருக்கும் சூப்பர் காய்ன் என்கிற பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் நீங்கள் பெற்றிருக்கும் சூப்பர் காய்ன்களின் எண்ணிக்கை காட்டப்படும்.
2. ஓடிடி தேர்வு
சூப்பர் காய்ன் பகுதியின் ஓடிடி பிரிவில், சோனி லைவ், ஜி5, டைம்ஸ் பிரைம் பிரீமியம் பேக், கானா மற்றும் ஓடிடி ப்ளே போன்ற பல ஓடிடி தளங்களைக் காண முடியும். அதில், சில சந்தாக்களுக்கு சூப்பர் காய்ன்கள் மட்டுமே தேவைப்படும், சிலவற்றிற்கு உங்கள் சூப்பர் காய்ன்களுடன் கூடுதலாக சப்ஸ்கிரிப்ஷன் கட்டணத்தின் ஒரு பகுதியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
இதையும் படிக்க: HDFC கிரெடிட் கார்டு அக்கவுன்ட்டை மூடுற ஐடியா இருக்கா…? இந்தப் பதிவு உங்களுக்குத்தான்…!
3. கூப்பன் குறியீடு
சூப்பர் காய்ன் பக்கத்தில் காண்பிக்கப்படும் பல ஓடிடி தேர்வுகளில் இருந்து, நீங்கள் விரும்பும் ஓடிடி-யை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், சூப்பர் காய்னை பயன்படுத்து என்கிற விருப்பத்தை தேர்வு செய்தால், உங்களுக்கென ஒரு பிரத்யேக கூப்பன் குறியீடு உருவாக்கப்பட்டு, உங்கள் பிளிப்கார்ட் கணக்கின் ‘மை ரிவார்ட்ஸ்’ பிரிவில் சேர்க்கப்படும்.
4. கூப்பனை பயன்படுத்துதல்
பின்னர், நீங்கள் தேர்ந்தெடுத்த ஓடிடி சேவையின் இணையதளத்திற்கு சென்று, உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து, மெயின் மெனுவிற்குச் சென்று “ஆக்டிவேட் ஆஃபர்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அதில், உங்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்பட்ட கூப்பன் குறியீட்டை, அதில் உள்ளிட வேண்டும்.
இதையும் படிக்க: PPF: பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து மாதம் ரூ.1,06,828 வரி இல்லாத வருமானத்தைப் பெறுவது எப்படி?
5. கட்டணம்
சில ஓடிடி தளங்களுக்கு, சூப்பர் காய்ன்கள் ஒரு பெரிய சலுகையை வழங்கியிருந்தாலும், சப்ஸ்கிரிப்ஷன் கட்டணத்தின் ஒரு பகுதியை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். எனவே, பெறப்பட்ட கூப்பனைப் பயன்படுத்திய பிறகு, மீதமுள்ள தொகையை நீங்கள் செலுத்த வேண்டும். இதையடுத்து, ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் இறுதியாக ஆக்டிவேட் செய்யப்படும்.
January 22, 2025 6:23 PM IST