Last Updated:
Kavin | கவின் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கவின் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் ‘லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குப் பிறகு ‘டாடா’, ‘ஸ்டார்’, ‘பிளடி பெக்கர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்தார்.
இந்த படங்கள் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பு பெற்றது. இருந்தாலும் கவின் படத்திற்கான தனி வியாபாரம் திரையுலகில் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் ஒரு திரைப்படத்தில் கவின் நடித்து வருகிறார்.
இது அவரின் நான்காவது படமாக தொடங்கப்பட்டது. இருந்தாலும் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நிறைவடைய காலம் எடுத்தது. அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இருக்கிறது.
மேலும் மார்ச் மாதம் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த படம் தவிர கவின் தற்போது நயன்தாராவுடன் ஒரு திரைப்படத்திலும், ஆண்ட்ரியா உடன் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அந்த திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன.
January 22, 2025 8:17 PM IST