Last Updated:
Saif Ali Khan | உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு சைஃப் அலி கான் கொடுத்த தொகை..நெகிழ வைத்த சம்பவம்!
தனது உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து நன்றி கூறி, ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்து கவுரவித்துள்ளார் நடிகர் சைஃப் அலிகான்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் கடந்த 16-ம் தேதி புகுந்த கொள்ளையன் அவரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதையடுத்து படுகாயமடைந்த சைஃப் அலிகானை வீட்டு பணியாளர்கள் மீட்டனர்.
உடனடியாக அங்குள்ள லீலாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை வீட்டிலிருந்து அழைத்துச்செல்ல உதவியவர் ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணா.
சரியான நேரத்தில் சைஃப் அலிகானை மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரை காப்பாற்ற உதவினார். அறுவை சிகிச்சைக்குப்பின் 5 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த சைஃப் அலிகான் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
அதற்கு முன்பு, தனது உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணாவை மருத்துவமனைக்கு நேரில் அழைத்து நன்றி கூறினார் சைஃப் அலிகான். ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணா, சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எந்தப் பணமும் வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அவரது இந்த உதவியை கவுரவிக்கும் விதமாக ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.50,000 பணத்தை கொடுத்து கௌரவித்துள்ளார். நடிகர் சைஃப் அலிகான், ஆட்டோ ஓட்டுநரை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
January 22, 2025 8:48 PM IST