Last Updated:

ஆசிஃப் அலி நடிப்பில் வெளியான ‘ரேகாசித்திரம்’ மலையாள படம் ரூ.50 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.

News18

ஆசிஃப் அலி நடிப்பில் வெளியான ‘ரேகாசித்திரம்’ மலையாள படம் ரூ.50 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘The Priest’ மலையாள படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜோஃபின் டி சாக்கோ. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரேகாசித்திரம்’. இந்தப் படத்தில் ஆசிஃப் அலி, அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மம்மூட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் கடந்த ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.6 கோடி என கூறப்படுகிறது.

இதையும் வாசிக்க: Saif Ali Khan | உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு சைஃப் அலி கான் கொடுத்த தொகை..நெகிழ வைத்த சம்பவம்!

படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் உலக அளவில் படம் ரூ.50 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. ஆசிஃப் அலி நடிப்பில் முன்னதாக வெளியான ‘கிஷ்கிந்த காண்டம்’ திரைப்படம் ரூ.50 கோடி வசூலை ஈட்டி வரவேற்பை பெற்றது.

தற்போது மற்றொரு படம் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்களின் மூலம் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆசிஃப் அலி.





Source link