Last Updated:

Muthukumaran | பிக்பாஸ் டைட்டில் வின்னரான முத்துக்குமரன், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபிறகு சக போட்டியாளரான தீபக்கின் வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும் தீபக்கின் மனைவிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

News18

பிக்பாஸ் டைட்டில் வின்னரான முத்துக்குமரன், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபிறகு சக போட்டியாளரான தீபக்கின் வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும் தீபக்கின் மனைவிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அண்மையில் முடிவடைந்தது. இதில் டைட்டில் வின்னரானார் முத்துக்குமரன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது முத்துக்குமரனும், தீபக்கும் நல்ல பாண்டிங்கில் இருந்தனர்.

தீபக் வெளியேறும்போது கண்ணீர்விட்டு அழுதார் முத்துக்குமரன். அண்ணன் – தம்பியாக பிணைப்பில் இருந்த இவர்கள் ஒருவருக்கொருவர் தன்னலமற்று உதவிக்கொண்டனர். முத்துக்குமரன் வெற்றியாளராக வேண்டும் என விரும்பியவர் தீபக்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதில் வின்னராக முத்துக்குமரனும், ரன்னராக சௌந்தர்யாவும் தேர்வாகினர். இதில் வின்னரான முத்துக்குமரன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி முதன் முறையாக தீபக் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் முத்துக்குமரன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவர் பேசும்போது, “மிக்க நன்றி. ஆனால் உங்கள் மீது எனக்கு மிகுந்த கோபம். காரணம், பிக்பாஸ் வீட்டில் ரயான், விஷால், அருண் பிரசாத் ஆகியோரை தாண்டி ஓடிவிட்டேன்.

ஆனால், தீபக்கை என்னால் தாண்ட முடியவில்லை. 45 வயதில் இவ்வளவு ஃபிட்டாக இவரை தயார் செய்து அனுப்பி எங்களை பாடாய் படுத்திவிட்டீர்கள். பிக்பாஸ் வீட்டில் உள்ளே இருந்த அனைத்துப் போட்டியாளர்களும் யார் தீபக்கின் வழிகாட்டி எனத் தேடிக்கொண்டிருந்தனர். அதனைச் செய்த உங்களுக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.





Source link