Last Updated:
மம்மூட்டி நடித்துள்ள ‘டொமினிக்’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் பட ரிலீஸுக்கான சிக்கல் தீர்ந்துள்ளது.
மம்மூட்டி நடித்துள்ள ‘டொமினிக்’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் பட ரிலீஸுக்கான சிக்கல் தீர்ந்துள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள ‘டொமினிக்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், சிம்புவை கதாநாயகனாக வைத்து ”சூப்பர் ஸ்டார்” என்ற படத்தை இயக்க கௌதம் வாசுதேவ் மேனன் தங்களுடன் ஒப்பந்தம் போட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பணமாக 2018ஆம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை அவர் திருப்பித் தரவில்லை என மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: Thalapathy 69 | ‘விஜய் 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் எப்போது? – வெளியான அப்டேட்
பணத்தை திருப்பி அளிக்காததால் அவர் இயக்கியுள்ள டொமினிக் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான கௌதம் மேனன் தரப்பு, படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு தடைவிதிக்ககோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.
January 23, 2025 6:57 AM IST