Last Updated:
Gold Rate | அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில் தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக 60 ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வரலாற்றிலேயே முதன் முறையாக தங்கம் விலை ஒரு சவரன் 60 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகிறது.
கடந்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி 47 ஆயிரத்து 280 ரூபாயாக விற்கப்பட்ட தங்கம், கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் முறையாக 50 ஆயிரத்தை எட்டியது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி 55ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை எட்டிய தங்கம் விலை, செப்டம்பரில் 56 ஆயிரமாகவும், அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி 58 ஆயிரத்து 400 ரூபாயாகவும் உயர்ந்தது.
தீபாவளி தினமான அக்டோபர் 31 ஆம் தேதி 59 ஆயிரத்து 640 ரூபாயாக விற்பனையானது. இந்த சூழலில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்ற இறக்கங்களை தங்கம் சந்தித்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில் தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக 60 ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இதுவரை மட்டும் தங்கத்தின் விலை 12 ஆயிரத்து 920 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதற்கிடையியே, தங்கம் விலை நான்கு ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் விலை கடந்த 1920 ஆம் ஆண்டு ஒரு சவரன் வெறும் 21 ரூபாயாக இருந்தது. ஆயிரம் ரூபாய் என்ற மைல்கல்லை தங்கம் விலை எட்டவே 60ஆண்டுகள் எடுத்தது. 1980ம் ஆண்டே 1000 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது.
அதேநேரம், 2009ஆம் ஆண்டுதான் தங்கம் முதல் முறையாக 10 ஆயிரம் ரூபாயை எட்டியது. அடுத்த 7 ஆண்டுகளில் அதாவது 2016ஆம் ஆண்டுதான் தங்கம் விலை 20 ஆயிரம் ரூபாயை தொட்டது. இதேபோல் தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாயை கடந்த 2020ஆம் ஆண்டு எட்டியது. 40 ஆயிரம் என்ற மைல்கல் 2022 ஆம் ஆண்டு எட்டப்பட்டது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது கடந்தாண்டு மார்ச் 28 ஆம் தேதி முதல் முறையாக 50 ஆயிரத்தை தொட்டது. அடுத்த ஓராண்டுக்குள் தங்கம் விலை 60 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
January 23, 2025 9:23 AM IST