2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக, பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, பெறுபேறு மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
“உண்மையில் துரதிர்ஷ்டவசமானது, எமக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டதற்கு.. . ஆனால் இதற்குக் காரணம், புலமைப் பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட நெருக்கடியால் நீதிமன்ற உத்தரவின் காரணமாகத் வினாத்தாள்கள் மதிப்பீட்டை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. வெகு விரைவில் பெறுபேறுகளை வெளியிட நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”