இந்திய அளவில் பல்வேறு மாடுகள் இனங்கள் வளர்க்கப்பட்டாலும் அவற்றுள் பல கலப்பின மாடுகள் ஆகவே உள்ளது. இதில் கிர் மாடு, இந்தியாவின் நாட்டு மாட்டு வகைகளில் ஒன்று. இது உருவில் பெரியதாகவும் மனிதர்களிடம் பழகுவதற்கு எளிதாகவும் இருக்கும். இவ்வகை மாடுகள் குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் பசுக்களுக்கான கோசாலை அமைத்து அதில் கிர் மாடுகளை வளர்த்து வரும் கோலப்பபிள்ளை கூறுகையில், “நான் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உதவி ஆய்வாளராக 30 ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். எனக்கு சிறுவயதில் இருந்தே மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம்.

இதையும் படிங்க: நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே கல்வி சுதந்திரம்… 200 ஆண்டுகளைக் கடந்த பெண்கள் பள்ளி…

மேலும், நான் வட மாநிலங்களில் பணிபுரியும் பொழுது அங்கு கிர் மாடுகளின் பால் உணவுகளை நான் சாப்பிட்டு உள்ளேன். அது மிகவும் ஆரோக்கியமானதாகவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திமிக்கதாகவும் எனக்கு இருந்தது.

எனவே நான் எனது சொந்த ஊரான குமரி மாவட்டத்தில் குறத்தியரை எனும் கிராமத்தில் கோசாலை வைத்து அதில் கிர் மாடுகளும் மற்றும் பால் தேவைக்காகச் சில கலப்பின மாடுகளையும் பராமரித்து வருகிறேன்.

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒருவர் மூன்று மாடுகளை வைத்தே மாதம் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும். ஒரு மாட்டின் மூலம் தினசரி 500 ரூபாய் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் உள்ளது. மாடுகளிலிருந்து பால் மட்டும் விற்பனை செய்யாமல் பால் மூலம் செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மாட்டுச் சாணத்திலிருந்து இயற்கை எரிவாயு, ஊதுபத்தி, திருநீறு, கிருமி நாசினி என பல பொருட்கள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதின் மூலம் அதிக லாபம் ஈட்டலாம்.

இதையும் படிங்க: Smart Ration Card: ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைச்சு இருக்கிங்களா… அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…

நாங்கள் அதற்கான வழிமுறைகளையும் பயிற்சிகளையும் இளைஞர்களுக்கு இலவசமாகவே கொடுத்து வருகிறோம். மேலும், பலர் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக மாடுகளைப் பராமரிக்க முடியாமல் இருப்பவர்களின் மாடுகளும் எங்கள் கோசாலையில் வந்து விடப்பட்டுள்ளது, அவற்றையும் பராமரித்து வருகிறோம்.

கிர் மாடுகளும் நாட்டு மாடு வகை தான். அதாவது கிர் மாடு என்பது அந்த மாடுகளின் பெயர் கிடையாது, அது வளர்ந்த கிர் காடுகளின் பெயரை வைத்து கிர் மாடு என பெயர் வந்தது. பண்டைய காலத்தில் ராஜாக்கள் இந்த மாடுகளைப் போட்டி போட்டுக் கொண்டு வளர்த்தார்கள். மேலும், அந்த மாடுகளின் பால் மற்றும் அது சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களையும் உண்டு வந்தார்கள். அந்த காலங்களில் கிர் மாடுகளின் பால் சாதாரண மனிதருக்குக் கிடைப்பதே மிகவும் அரிதாக இருந்தது, தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் இது எளிதாகக் கிடைக்கிறது.

சாதாரண மாடுகளிலிருந்து பெறப்படும் ஏ1 புரோட்டின் பாலில் அந்த மாடுகளின் கழிவுகள் கூட கலந்திருப்பதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த பாலில் கொழுப்புச் சத்தும் அதிகமாக உள்ளது. மேலும், அந்த மாடுகள் முழுமையான நாட்டு மாடுகள் அல்ல கலப்பின மாடுகள் ஆகவே உள்ளது.

இதையும் படிங்க: Climate Affect Fishing: பனியால் பாதிக்கும் மீன்பிடி பணி… கரையில் தேங்கிய தோனி… கவலையில் மீனவர்கள்…

ஆனால் ஏ2 புரோட்டின் பால் மிகவும் சுத்தமானதாகவும் பல ஆரோக்கியச் சத்துக்கள் நிறைந்துள்ளதாக உள்ளது, இது எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் உள்ளது. மேலும், இந்த ஏ2 புரோட்டின் பாலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக உள்ளதால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

கிர் மாடுகளில் ஆறு வகை மாடுகளில் பால் சத்துகள் அதிகமாக உள்ளது (கிர், சாகிவால், ராட்டி, கார்பாகர், வெர்சண்டி, காங்க்ரடே) இதுபோக நமது தமிழ்நாட்டு இனங்களான காங்கேயம் போன்ற பல்வேறு மாடுகளிலும் பால் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது போக இன்னமும் பல கலப்பினங்கள் உள்ளன. ஆனால் எல்லா மாடுகளிலும் எல்லாரும் பால் கறந்து விட முடியாது. அதனுடன் நன்றாகப் பழகிய பின்னரே பால் கறக்க முடியும்.

பால் மூலம் பல்வேறு உபரி பொருட்களைச் செய்ய முடியும். பாலிலிருந்து மோர், தயிர், பட்டர் மில்க், பன்னீர், நெய் போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்க முடியும். இதில் சுத்தமான நெய் 3 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் 3000 ரூபாய் கொடுத்தாலும் ஏ2 நெய் கிடைப்பதில்லை. அந்த அளவுக்குச் சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதையும் படிங்க: Road Safety Rules: மலை அழகை ரசிக்க ட்ரிப் போறிங்களா… அப்போ இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க…

மேலும், ஆட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி ஊதுபத்தி, இயற்கை எரிவாயு தயாரிப்பது எல்லாம் மிக எளிதான முறைதான். அந்த காலத்தில் இதை அனைவரும் செய்தார்கள். தற்போதைய காலகட்டத்தில் இது யாருக்கும் தெரியாததால் மிகவும் கடினமான வேலை என்கிறார்கள். ஒரு கிலோ சாணத்தை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து இயற்கை எரிவாயுவாகப் பயன்படுத்தலாம். அதேபோன்று மாட்டுச் சாணத்தைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைத்து அதனுடன் சிறிது உமி சேர்த்து நன்கு எரிய வைத்தால் சுத்தமான திருநீறு கிடைக்கும்.

இந்தத் திருநீரில் ஆக்ஸிஜன் கண்டண்டுகள் அதிகமாக உள்ளதால் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. மேலும், இந்த திருநீர் போன்று பல்வேறு நோய்களை இது தீர்த்து வைக்கிறது. நாட்டு மாடுகளுக்குத் திமில் அதாவது சூரியநாடு எனப்படும் தலைக்கு அடுத்து இருக்கும் திமில் அதிகமாக இருக்கும். கலப்பின மாடுகளுக்கு திமில் இருக்காது. எந்த மாடுகளுக்கு திமில் அதிகமாக இருக்கிறதோ அந்த மாடுகளின் பால் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும், கலப்பின மாடுகள் அதிகமாக பால் கொடுக்கும்.

இதேபோன்று ஒருங்கிணைந்த பண்ணை முறை என்பது ஒரு பண்ணையில் மாடுகள் வளர்க்கும் பொழுது அங்குள்ள மாடுகள் உணவு உண்ணும் போது சிறிதளவு உணவுகள் வீணாகிறது. அந்த வீணாகும் உணவுகளை கோழி வளர்ப்பதன் மூலம் அந்தக் கோழிகள் அந்த உணவை உண்டு வளர்கிறது. இந்த ஒருங்கிணைந்த பண்ணை முறை என்பது மிகவும் லாபமான முறையாகும். இதில் 50 பசு மாடுகளை பராமரித்து வருவதாகவும், அதன் மூலம் மாதம் 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது” என அவர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழ் செய்திகள்/வணிகம்/

Successful Dairy Farmer: கிர் மாடு வளர்ப்பில் மாதம் ரூ.2 லட்சம் வருமானம்… லாபம் கொட்டும் ஒருங்கிணைந்த பண்ணை முறை…



Source link