Last Updated:
Union Budget 2025 Expectations | திருப்பூரில் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஜவுளி வர்த்தகம் நடைபெறும் நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளை ஜவுளி உற்பத்தியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் பட்ஜெட் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், வட்டி மானியம், ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய ஆலைகளை அமைக்க உதவி உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டும் என்று திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் ஒன்றாம் தேதி தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படுமா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதேபோல, திருப்பூரில் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஜவுளி வர்த்தகம் நடைபெறும் நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளை ஜவுளி உற்பத்தியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
வட்டி மானியம், செயற்கை இழையில் உற்பத்தியாகும் ஆடைகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தனி கவனம், பசுமை தொழிற்சாலைகளை ஊக்குவிக்க சிறப்பு ஊக்கத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : 4 ஆண்டில் இருமடங்கு உயர்வு: தங்கம் விலை ரூ.1000 தொட எத்தனை ஆண்டுகள் ஆனது தெரியுமா?
வங்கதேசத்துக்கு சென்ற ஜவுளி ஆர்டர்கள், தற்போது இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளதால், ஜவுளித் துறைக்கு மானியம் வழங்க வேண்டும் என்று திருப்பூர் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறப்பு நிதி கொள்கையை அறிவிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வீடு மற்றும் விடுதிகள் கட்ட உதவ வேண்டும், ஜவுளித் துறைக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: பாலாஜி பாஸ்கர், திருப்பூர்
January 23, 2025 12:02 PM IST
Union Budget 2025 | வட்டி மானியம், ஏஐ தொழில்நுட்பம்… மத்திய பட்ஜெட்டில் ஜவுளி உற்பத்தியாளர்களின் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?