மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இன்று (23) நடைபெற்ற போட்டியில் இந்தியாவிடம் இலங்கை 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டி கோலாலம்பூரில் குரூப் ‘ஏ’ போட்டியாக நடைபெற்றது.
இந்திய அணி நிர்ணயித்த 119 ஓட்ட இலக்குடன் விளையாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 58 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளைஞர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் எடுக்க முடிந்தது.
இந்தியாவுக்காக அதிகபட்ச இன்னிங்ஸை விளையாடிய த்ரிஷா கோங்காடி, வெறும் 44 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை அணி சார்பாக பிரமுதி மெத்சாரா (2/10), லிமன்சா திலகரத்னே (2/14) மற்றும் அசேனி தலகுனே (2/24) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளர்களாகத் தெரிவானார்கள்.
இருப்பினும், இலங்கை அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், அவர்கள் ஏற்கனவே சூப்பர் 6 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.