Last Updated:
Whatsapp update: இனி வாட்ஸ்அப்பிலும் நீங்கள் விரும்பிய இசையுடன் சேர்ந்த ஸ்டேட்டஸை அப்டேட் செய்ய முடியும்.
இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு வசதியை வாட்ஸ்அப் விரைவில் தனது புதிய அப்டேட் வழியாக யூசர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளது. வாட்ஸ் அப்பில் அடிக்கடி ஸ்டேட்டஸ் வைக்கும் ஸ்டேட்டஸ் பிரியர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த அப்டேட் கட்டாயம் உங்களுக்கானதுதான். அதிலும் குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோக்களை பகிர்ந்து அதில் மியூசிக் சேர்த்து ஸ்டேட்டஸ் வைக்க விரும்பும் வகையிலான ஸ்டேட்டஸ் பிரியராக நீங்கள் இருந்தால் சொல்லவே தேவையில்லை.
இனி வாட்ஸ்அப்பிலும் நீங்கள் அது போலவே இசையுடன் சேர்ந்த ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய முடியும். ஆண்டராய்ட் மற்றும் ஐஓஎஸ் பீட்டா யூசர்களுக்கு தற்போது சோதனை முறையில் இருக்கும் இந்த வசதி விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
WAbetainfo-வின் அறிவிப்பின்படி அதிகாரப்பூர்வமாக இந்த வசதியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் பீட்டா யூசர்களுக்கு சோதனை முறையில் சில காலம் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இதில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து கலைந்த பிறகு வழக்கமான பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த புதிய வசதி எப்படி வேலை செய்யும்?
உங்கள் வாட்ஸ் அப்பில் வழக்கமாக ஸ்டேட்டஸ் வைப்பது போலவே ஸ்டேட்டஸ் பக்கத்திற்கு சென்று, டிராயிங் எடிட்டர் (Drawing Editior) என்ற ஆப்ஷனுக்குச் சென்று, கீழ்பக்கம் உள்ள மியூசிக் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதில் தோன்றும் மெனுவில் நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் அல்லது இசை கலைஞர்களின் இசையை தேடி செலக்ட் செய்து கொள்ள முடியும். கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராமில் இருப்பது போலவே, இதிலும் நீங்கள் இசையை தேர்ந்தெடுக்க முடியும்.
இதையும் படிக்க: Noise-ன் கலர்ஃபிட் ப்ரோ 6 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்… விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் உள்ளே…!
அவ்வாறு நீங்கள் தேர்வு செய்த பாடலில், நீங்கள் விரும்பிய பகுதியை மட்டும் அதிகபட்சம் 15 நொடிகள் வரையிலான கால அளவிற்குள் தேர்வு செய்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைக்க முடியும். ஃபோட்டோவிற்கு பதிலாக வீடியோவை ஸ்டேட்டஸ்-ஆக வைத்து, அதனோடு மேற்கூறிய முறையில் இசையை நீங்கள் சேர்க்கும் பட்சத்தில் வீடியோவின் கால அளவு எவ்வளவு உள்ளதோ, அதே அளவிற்கு நீங்கள் சேர்த்த இசையின் கால அளவும் ப்ளே ஆகும்.
இதையும் படிக்க: அமேசானின் அட்டகாச தள்ளுபடி… ஒன்பிளஸ் நார்டு 4 வாங்க இதுவே சரியான நேரம்…!
மேலும், இன்ஸ்டாகிராமில் இருப்பதை போலவே உங்களது ஸ்டேட்டஸை பார்க்கும் மற்றவர்களும், நீங்கள் சேர்த்துள்ள பாடலின் பெயரை கிளிக் செய்து, அந்த பாடலின் இசை கலைஞர் மற்றும் அதன் இதர விவரங்களை பார்க்க முடியும். இதன் மூலம் புதிய இசையையும், இசை கலைஞர்களையும் தெரிந்து கொள்ள எளிமையாக இருக்கும். இந்த வசதியானது ஏற்கனவே சில பீட்டா யூசர்களுக்கு பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில வாரங்களுக்குள்ளாகவே வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் ஆனது உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்அப் யூசர்களின் வழக்கமான பயன்பாட்டிற்கு வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
January 23, 2025 4:50 PM IST
Whatsapp update: வாட்ஸ்அப் யூசர்களுக்கு ஹாப்பி நியூஸ்…! இனி பாடல்களுடன் ஸ்டேட்டஸ் வைக்கலாம்… விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய அப்டேட்…!