Last Updated:
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஒரு பக்கம் இருந்தாலும், சைஃப் அலிகானுடைய மனபலம் அவர் குணம் அடைவதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடிகர் சைஃப் அலிகான் கத்தி குத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். அவருக்கு இதுபோன்ற சம்பவம் நடப்பது முதன்முறை அல்ல. 2000 ஆம் ஆண்டின் போது நடந்த ஒரு சம்பவத்தில் அவருக்கு 100 தையல்கள் போடப்பட்டன.
இது குறித்த தகவல்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சைஃப் அலி கான் செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார்.
சைஃப் அலிகானுக்கு சொத்து மதிப்பு 1300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அனைவரிடமும் எளிமையாக பழகும் குணம் கொண்டவராக சைப் அலிகான் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 16ஆம் தேதி மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார். இதன் பின்னர் அவரை மும்பை லீலாவதி மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கடந்த 21ஆம் தேதி நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கு முன்பாக உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்தது.
2000 ஆம் ஆண்டின் போது அவர் இந்தி திரைப்படமான கியா கெனா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது படத்தில் இடம் பெறும் காட்சிக்காக பைக்கில அவர் பயிற்சி எடுத்தபோது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையை மருத்துவர்கள் அளித்தனர். பைக்கிலிருந்து விழுந்த விபத்தில் அவர் 100 முறை சுருண்டு விழுந்துள்ளார். சிகிச்சையில் அவருக்கு முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். விபத்தின் போது அவருக்கு ரத்தம் ஏராளமாக வழிந்து ஓடியது.
இதையும் படிங்க – SK 25 | சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா படத்தின் டைட்டில் இதுவா?
இந்த சம்பவம் அந்த நேரத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஒரு பக்கம் இருந்தாலும், சைஃப் அலிகானுடைய மனபலம் அவர் குணம் அடைவதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
January 23, 2025 6:16 PM IST