கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை பகுதிக்கு விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் இலங்கையர்களுக்கான அதிகளவான தொழில்வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சிறந்த வளங்கள் காணப்படுகின்றன,அது தொடர்பில் சிறந்த தெளிவுகளை பெற்றுக் கொள்ளவுள்ளேன்.
அதனையடுத்து, அவற்றை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்துள்ளார்.