Last Updated:

இந்த வாரம் தியேட்டர், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். 

News18

இந்த வாரம் தியேட்டர், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

குடும்பஸ்தன்: ‘நக்கலைட்ஸ்’ யூடியூப் புகழ் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இன்று (ஜன.24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பாட்டல் ராதா: பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் குருசோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாட்டல் ராதா’ திரைப்படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார்.

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்: ‘யூடியூப்’ புகழ் ஹரிபாஸ்கர், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தை திரையரங்குகளில் காணலாம். இந்தப் படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

குழந்தைகள் முன்னேற்றக் கழகம்: யோகி பாபு, செந்தில் நடித்துள்ள ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தை சங்கர் தயால் இயக்கியுள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வல்லான்: மணி செய்யோன் இயக்கத்தில் சுந்தர் சி நடித்துள்ள ‘வல்லான்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

Dominic and the Ladies Purse: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள ‘ ‘Dominic and the Ladies Purse’ மலையாள திரைப்படத்தை திரையரங்குகளில் காண முடியும்.

Sky Force: சந்தீப் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், வீர் பஹாரியா, சாரா அலிகான் உள்ளிட்டோர் நடித்த ’Sky Force’ இந்திப் படத்தை திரையரங்குகளில் காண முடியும்.

இன்டர்ஸ்டெல்லர்: கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம் இன்று ரீ-ரிலீசாகியுள்ளது. ஐமேக்ஸ் திரையரங்குகளில் படத்தை பார்க்கலாம்.

நேரடி ஓடிடி: அஸ்வனி திர் இயக்கத்தில் மாதவன் நடித்ததுள்ள ` Hisaab Barabar’ ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ளது.

திரையரங்க வெளியீட்டுக்குப் பின் ஓடிடி: I want to talk – அபிஷேக் பச்சன் நடித்துள்ள இந்திப் படமான ‘i want to talk’ இந்திப் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.

விடுதலை 2 – வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த படம் `விடுதலை 2′. அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

பரோஸ்: மோகன்லால் இயக்குநர் அவதாரமெடுத்துள்ள படம் `Barroz’. ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

ஸ்மைல் மேன் – சரத்குமாரின் 150-வது படமான ‘ஸ்மைல் மேன்’ படம் ஆஹா ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

திரு.மாணிக்கம்: நந்தா பெரியசாமி இயக்கிய படம் `திரு மாணிக்கம்’ படத்தில் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜீ5 ஓடிடியில் காணக்கிடைக்கிறது.



Source link