Last Updated:
Game Changer | ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
இதையும் வாசிக்க: Samantha | தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன்? – நடிகை சமந்தா ஓப்பன் டாக்
தில் ராஜு தயாரித்துள்ளார். தெலுங்கில் உருவான இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியிடப்பட்டது. படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி எனக் கூறப்படுகிறது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.200 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படத்தின் பட்ஜெட்டை வசூலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ராம் சரண் தேதிகள் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
January 24, 2025 12:45 PM IST