Last Updated:
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றதை தொடர்ந்து ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
கேப்டனாக மட்டும் இருக்க விரும்பவில்லை என்றும் தலைவராகவும் இருக்க விரும்புவதாகவும் இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த புதன் அன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் 4 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி இந்த தொடரை எளிதாக வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். டி20 கிரிக்கெட் தொடர் குறித்து சூர்யா குமார் யாதவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
நான் ஒரு கேப்டனாக மட்டுமல்ல, தலைவனாகவும் இருக்க விரும்புகிறேன். ஒரு குழுவாக நாம் சாதிக்க வேண்டும் என்று விரும்பினால் எல்லோரும் ஒரே கவனத்தில் இருக்க வேண்டும். விளையாட்டுக்கு தேவையான அடிப்படை பண்புகள், நல்ல பழக்கங்கள் உள்ளிட்டவற்றை மைதானத்தில் மட்டுமின்றி மைதானத்திற்கு வெளியேயும் கடைபிடிக்க வேண்டும் என்று நான் எனது அணியை கூறி வருகிறேன்.
மைதானத்திற்குள் நுழைந்து விட்டால் நீங்கள் முழுமையாக போட்டியை அனுபவித்து விளையாட வேண்டும் என்று தெரிவித்தார். டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.
உலகக் கோப்பை தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டனாக சூரிய குமாரை பிசிசிஐ நியமித்தது. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றதை தொடர்ந்து ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
January 24, 2025 3:31 PM IST