Last Updated:
செக் மோசடி வழக்கில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு 3 மாதம் சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செக் மோசடி வழக்கில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு 3 மாதம் சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. கடந்த ஆண்டு அஜ்மல் அமீர் நடிப்பில் வெளியான ‘வியூகம்’ படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் செக் மோசடி விவகாரத்தில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஸ்ரீ என்ற அமைப்பு செக் மோசடி தொடர்பாக இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வழக்கு தொடர்ந்தது.
இதையும் வாசிக்க: Oscar Award | ஆஸ்கர் ரேஸில் பிரியங்கா சோப்ரா நடித்த குறும்படம்…பரிந்துரை பட்டியல் வெளியீடு!
இதில் 2022ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மாவுக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதில் பிணையில் வெளியே வர முடியாத வகையில் 3 மாதம் சிறைத் தண்டனையும், சம்பந்தப்பட்ட அமைப்புக்கு 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகையும் வழங்க ராம்கோபால் வர்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
January 24, 2025 8:26 AM IST