சமூக வலைதளங்கள் பொதுவாக மக்களுடனான இணைப்பை உறுதி செய்யும் அதே வேளையில், மக்கள் தங்களது விருப்பங்களை ஸ்டேட்டஸ்களாகவோ, ஸ்டோரிகளாகவோ பகிரவும் அனுமதிக்கிறது. அந்த வகையில், மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களுமே ஸ்டேட்டஸ், ஸ்டோரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த மூன்று தளங்களையும் இணைக்கும் வகையில் மெட்டா நிறுவனம் ஓர் புதிய அம்சத்தைக் கொண்டுவர இருக்கிறது. இதன்மூலம், வாட்ஸ்அப் யூசர்கள் தங்களது ஸ்டேட்டஸை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் ஸ்டோரியாக பதிவிட முடியும்.
அக்டோபர் 2024இன் படி, ஃபேஸ்புக் 3,070 மில்லியன் பயனர்களுடன் முதல் இடத்திலும், இன்ஸ்டாகிராம் 2,000 மில்லியன் பயனர்களுடன் மூன்றாவது இடத்திலும், வாட்ஸ்அப் 2,000 மில்லியன் யூசர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. 2,530 மில்லியன் யூசர்களுடன் கூகுளின் யூடியூப் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது.
மேலும், 535.8 மில்லியன் யூசர்களுடன், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வாட்ஸ்அப் யூசர்களை இந்தியா கொண்டுள்ளது. அதிலும் கிட்டத்தட்ட, 99% மொபைல் யூசர்கள் மெசேஜிங் ஆப்பாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். தனது மில்லியன் கணக்கான யூசர்களின் வசதிக்கேற்ப, பல்வேறு அப்டேட்களையும், மேம்படுத்தல்களையும் மெட்டா தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில், தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக் ஸ்டோரியாக பகிரும் வசதியை விரைவில் மெட்டா அறிமுகப்படுத்த இருக்கிறது.
வெளியாகி இருக்கும் அறிக்கைகளின்படி, வாட்ஸ்அப் அடுத்த சில மாதங்களில் மெட்டாவின் அக்கவுண்ட் சென்டரில் சேர்க்கப்படும். அதன் பின்னர், உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளாக பகிர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை மெட்டாவின் அக்கவுண்ட் சென்டரில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: Whatsapp update: வாட்ஸ்அப் யூசர்களுக்கு ஹாப்பி நியூஸ்…! இனி பாடல்களுடன் ஸ்டேட்டஸ் வைக்கலாம்… விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய அப்டேட்…!
இந்த இணைப்புக்கு பிறகு, மெட்டா அக்கவுண்ட் சென்டரில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் கணக்குகளும் இயல்பாகவே முடக்கப்பட்டிருக்கும். யூசர்கள் விரும்பும் பட்சத்தில் அதனை ஆக்டிவேட் செய்யலாம். மேலும், உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை எப்படி மற்றும் எங்கே பகிர விரும்புகிறீர்கள் என்பது குறித்து யூசர்களுக்கு அதில் முழு அனுமதி வழங்கப்பட்டு இருக்கும். இதை பயன்படுத்தி நீங்கள், உங்கள் ஃபேஸ்புக் ஸ்டோரி, உங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அல்லது இரண்டிலுமே பதிவிடலாம்.
அக்கவுண்ட்ஸ் சென்டர் ஒரே கணக்கைக் கொண்ட பல மெட்டாவுக்குச் சொந்தமான ஆப்ஸில் உள்நுழையவும் உங்களை அனுமதிக்கிறது. மேலும், மெட்டா, உங்களது அவதார்கள், மெட்டா ஏஐ ஸ்டிக்கர்கள் மற்றும் உங்களது கற்பனையான படைப்புகளை அனைத்து மெட்டா ஆப்களிலும் பயன்படுத்தும்படி, அக்கவுண்ட் சென்டர் மூலம் ஒரே இடத்தில் நிர்வகிக்கும் வசதியை வழங்க முடிவு செய்திருக்கிறது.
இதையும் படிக்க: Noise-ன் கலர்ஃபிட் ப்ரோ 6 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்… விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் உள்ளே…!
அக்கவுண்ட் சென்டரில், வாட்ஸ்அப்பைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் வாட்ஸ்அப் மெசேஜஸ் மற்றும் கால்கள் எப்போதும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனால் பாதுகாக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது என மெட்டா உறுதிப்படுத்துகிறது. இதன்மூலம், வேறு யாருமோ, வாட்ஸ்அப்போ அல்லது மெட்டா கூட அவற்றைப் படிக்கவோ, கேட்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
January 26, 2025 9:34 AM IST