இந்த மேம்பாடுகள் ஆன்லைன் ட்ரான்ஸ்பெர் கிளைம்களை தாக்கல் செய்வதை முன்பு இருந்ததைவிட எளிதாக்கியுள்ளது மற்றும் தாமதங்களைக் குறைத்து செயல்முறையை திறம்படச் செய்கிறது. குறிப்பாக வேலை மாறிய ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த செயல்முறையை ஆதார் மற்றும் பிற தேவையான ஆவணங்களின் உதவியுடன் முடிக்க முடியும்.

EPFO போர்ட்டல் மூலம் ஊழியர்கள் பெயர், பிறந்த தேதி, கணவன்/மனைவியின் பெயர், மரிடல் ஸ்டேட்டஸ், நேஷனலிட்டி, பாலினம் மற்றும் வேலை செய்யும் தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களில் உள்ள தவறுகளை தற்போது சரிசெய்து கொள்ளலாம்.

PF பரிமாற்றத்திற்கான தகுதி என்ன?

இந்த புதிய வசதியைப் பெற, நீங்கள் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

1. ஆதாருடன் UANஐ இணைக்கவும்:

யுனிவர்சல் அக்கௌன்ட் நம்பரை (UAN) ஆதாருடன் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.

2. KYC:

ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு போன்ற உங்கள் கணக்குத் தகவல்கள் EPFO ​​அமைப்பில் சரிபார்க்கப்பட வேண்டும்.

3. EPFO ​​கணக்கு:

உங்கள் பழைய மற்றும் புதிய PF கணக்குகள் EPFOஆல் நிர்வகிக்கப்பட வேண்டும்.

4. சரிபார்க்கப்பட்ட வெளியேறும் தேதி:

உங்கள் பழைய முதலாளியின் பதிவுகளில், கடைசியாக வேலை செய்த தேதியை EPFO ​​போர்ட்டலில் அப்டேட் செய்ய வேண்டும்.

இதையும் படிக்க: வங்கி காசோலைகளில் கருப்பு மையால் எழுதலாமா…? – ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் சொல்வதென்ன…?

ஆன்லைனில் பரிமாற்றம் செய்வது எப்படி?

  1. முதலில் EPFO ​​உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்லவும்.
  2. உங்கள் UAN, பாஸ்வர்ட் மற்றும் கேப்சா ஆகியவற்றை தேர்வு செய்து உங்கள் கணக்கில் லாகின் செய்யவும்.
  3. பின்னர் ‘ஆன்லைன் சேவைகள்’ டேப்-ஐ கிளிக் செய்யவும். ‘ஒன் மெம்பெர் – ஒன் EPF அக்கௌன்ட் (ட்ரான்ஸ்பெர் ரெக்வஸ்ட்)’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  4. இதற்குப் பிறகு, தனிப்பட்ட விவரங்களுடன் ஏற்கனவே இருக்கும் PF கணக்கு தொடர்பான விவரங்களை சரிபார்க்கவும்.
  5. PF கணக்கு விவரங்களை சரிபார்த்த பிறகு, கடைசி PF கணக்கு விவரங்கள் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  6. உங்களது பழைய வேலைவாய்ப்பு PF கணக்கைப் பார்க்க, ‘கெட் டீட்டெய்ல் ’ என்பதை கிளிக் செய்யவும்.
  7. UAN உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTPஐ பெற Get OTP ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  8. OTPஐ என்டர் செய்த பிறகு, சப்மிட் என்பதை கிளிக் செய்யவும்.
  9. விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, ‘ட்ராக் க்ளைம் ஸ்டேட்டஸ்’ என்பதற்கு சென்று உங்கள் பரிமாற்றக் கோரிக்கையின் ஸ்டேட்டஸைக் கண்காணிக்க முடியும்.

இதையும் படிக்க: FDக்கு 8%க்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்கும் 10 இந்திய வங்கிகள்…!

வெற்றிகரமான PF பரிமாற்றத்திற்கு பின்வருவனவற்றை உறுதிபடுத்தவும்:

உங்கள் EPFO ​​போர்ட்டலில் UAN ஆக்ட்டிவேட்டட்டாக இருக்க வேண்டும். இரண்டு கணக்குகளும் EPFO-ன் கீழ் இருக்க வேண்டும். உங்களின் பழைய முதலாளி, கடைசியாக நீங்கள் வேலை பார்த்த தேதியை அப்டேட் செய்திருக்க வேண்டும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

EPFO விதிகளில் ஒரு பெரிய மாற்றம்: உங்கள் PF கணக்கை ஆன்லைனில் புதிய முதலாளிக்கு மாற்றுவது எப்படி…?



Source link