கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்ஸ் குளோபல் ஹேண்ட்செட் மாடல் சேல்ஸ் டிராக்கரின் கூற்றுப்படி, சாம்சங் உலகளாவிய டாப் 10 சிறந்த விற்பனையான ஸ்மார்ட்ஃபோன்கள் பட்டியலில் ஐந்து இடங்களுடனும், ஆப்பிள் நான்கு இடங்களுடனும், சியோமி ஒரு இடத்துடனும் முன்னிலை வகிக்கின்றன.

டாப் 10 பட்டியலில் ஆப்பிளின் பங்கு சற்று குறைந்துள்ள நிலையில், சாம்சங்கின் இருப்பு முதல் 10 ஸ்மார்ட்ஃபோன்களின் ஒருங்கிணைந்த சந்தை பங்களிப்பை சுமார் 19 சதவீதமாக வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

“ஹை-என்ட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான மக்களின் விருப்பம் மாறி வருவதால், ஐபோனின் அடிப்படை மற்றும் ப்ரோ வகைகளுக்கு இடையேயான இது இடைவெளியை படிப்படியாகக் குறைக்கிறது” என்று ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது.

மூன்றாவது காலாண்டில் (Q3) முதல்முறையாக, குறிப்பிடத்தக்க வகையில், மொத்த ஐபோன் விற்பனையில் ப்ரோ வகை மாடல்கள் கிட்டத்தட்ட பாதி அளவிற்கு விற்பனையாகி தங்களது பலத்தை நிரூபித்துள்ளன. இந்த மாற்றம் ஆப்பிளின் அதிக மதிப்புள்ள ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனை அதிகமாகி இருப்பதைக் காட்டுகிறது.

“2018 முதல் மூன்றாவது காலாண்டில் முதல்முறையாக, சாம்சங்கின் ஒரு கேலக்ஸி எஸ் சீரிஸ் வேரியண்ட் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 10 இடங்களைக் கைப்பற்றிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்கள் Q3 2024இல் உலகளாவிய ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் 19 சதவீதத்தை கைப்பற்றியுள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, மக்கள் சமீபத்திய ஐபோன்களை தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக வளர்ந்து வரும் சந்தைகளில், ஆப்பிளின் ஹை-எண்ட் மாடல்களின் விற்பனைக்கு இது கூடுதல் பங்களிக்கிறது.

இதையும் படிக்க: Paytm UPI Statement: பேடிஎம்மில் புதிய UPI ஸ்டேட்மென்ட்… யூஸ் பண்ணுவது எப்படி?

கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் ஆஃபர்கள் வழங்கப்படுவதே மக்களிடையே இந்த வரவேற்புக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது சமீபத்திய ஐபோன்களை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதாக கூறப்படுகிறது.

சாம்சங்கின் கேலக்ஸி எஸ்24, 2024ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (Q3) முதல் 10 இடங்களில் தொடர்ந்து ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும், மூன்றாவது காலாண்டில் முதல்முறையாக 2018 முதல், ஒரு கேலக்ஸி எஸ் தொடர் வேரியண்ட் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய LTPO டிஸ்ப்ளேக்களுடன் அறிமுகமாக உள்ள ஐபோன் 17 சீரிஸ்…!!

“ஆப்பிள் மற்றும் சாம்சங் தங்கள் பிரீமியம் ஸ்மார்ட்ஃபோன்களை ஆப்பிள் இன்டலிஜென்ஸ் (Apple Intelligence) மற்றும் கேலக்ஸி ஏஐ (Galaxy AI) உடன் மேலும் வலுப்படுத்துகின்றன. இது சம்பந்தப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களை இந்த தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த உதவும். இதுதவிர இந்த இரண்டு பிராண்டுகளும் பிரீமியம் பிரிவில் ஒரு வித்தியாசமான காரணியாக ஜென்ஏஐ (GenAI)ஐ மேம்படுத்துகின்றன” என்று அறிக்கை கூறுகிறது.



Source link