Last Updated:

வினிதா சிங், ரூ.1 கோடி சம்பளத்தை நிராகரித்து, சுகர் காஸ்மெட்டிக்ஸ் நிறுவி, ரூ.4,000 கோடி மதிப்பை அடைந்தார். பாலினச் சவால்களை எதிர்கொண்டு, தனது கணவருடன் இணைந்து வெற்றியை பெற்றார்.

News18

ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியின் நான்காவது சீசனில், ஊக்கமளிக்கும் தொழில்முனைவோர்களின் குழுவை அறிவித்துள்ளது, இதில் வினிதா சிங் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். ரூ.1 கோடி சம்பளமாகப் பெறும் வேலை வாய்ப்பை நிராகரித்ததில் இருந்து ரூ.4,000 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பிராண்டை உருவாக்குவது வரையிலான அவரது அபாரமான பயணம், அர்ப்பணிப்பு, தொலைநோக்குப் பார்வை மற்றும் மன உறுதியை எடுத்துக்காட்டுகிறது. இந்த வெற்றிக்கான பாதையில், அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் சவால்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

ரூ.1 கோடி வேலை வாய்ப்பை நிராகரித்தல்: ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற வினிதா, 23-வது வயதில் தனது வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கியமான முடிவை எதிர்கொண்டார். தனது தொழில்முனைவோர் கனவைத் தொடர்வதற்காக, மிகப்பெரிய முதலீட்டு வங்கியில் இருந்து ரூ.1 கோடி சம்பளமாகக் கிடைக்கும் வேலை வாய்ப்பை நிராகரித்தார். பெரிய லட்சியங்களுடன் மும்பைக்கு குடிபெயர்ந்த அவர், ரூ.10,000 மாதச் சம்பளத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார். இந்தப் பாதை கடினமாக இருந்தது. தோல்வியுற்ற ஸ்டார்ட் அப் திட்டங்கள் மற்றும் நிதி சிக்கல்கள் பெரும் சிரமத்தை கொடுத்தன. ஆனால் அவர் ஒருபோதும் தனது முயற்சியைக் கைவிடவில்லை.

வணிகத்தில் பாலினச் சார்புகளை எதிர்த்துப் போராடுதல்: வினிதா தனது ஆரம்ப ஆண்டுகளில், ஆண் ஆதிக்கம் நிறைந்த வணிக உலகில் பாலினச் சார்பை எதிர்கொண்டார். தனது கணவர் நிறுவனத்தில் சேராத வரை முதலீட்டாளர்கள் தனக்கு நிதியளிக்க மறுத்ததாக கரீனா கபூர் கானின் போட்காஸ்டில் வினிதா பகிர்ந்து கொண்டார். இதுபோன்ற பின்னடைவுகள் இருந்தபோதிலும், அவர் மன உறுதியோடு இருந்து, பல தடைகளை உடைத்து, முரண்பாடுகளுக்கு எதிராக தனது வணிகத்தை வெற்றிகரமாக உருவாக்கினார்.

வாழ்க்கையில் ஒரு முன்கூட்டிய ஆரம்பம்: வெறும் 1.2 கிலோ எடையுடன் ஏழு வாரங்களுக்கு முன்னதாகவே குறை மாதப் பிரசவத்தில் தான் பிறந்ததாக ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில் வினிதா பகிர்ந்துள்ளார். தனது ஆரம்ப நாட்களை இன்குபேட்டரில் கழித்ததாகவும், பிறந்து மூன்று நாட்கள் கழித்தே தன்னுடைய தாய் தன்னைப் பார்க்க முடிந்ததாகவும் கூறினார். இதுதான் அவரது வாழ்க்கை மற்றும் வணிகத்திற்கான உறுதியான அணுகுமுறையை அவரிடம் வடிவமைத்தது.

தோல்விகளில் இருந்து கற்றல்: சுகர் காஸ்மெட்டிக்ஸ் (Sugar Cosmetics) நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு, காப்பீட்டு ஸ்டார்ட் அப், ஒரு உள்ளாடை பிராண்ட் மற்றும் அழகுசாதனச் சந்தா சேவை உட்பட பல முயற்சிகளில் பரிசோதனை செய்தார். இவை வெற்றிபெறவில்லை என்றாலும், ஒவ்வொரு தோல்வியும் அவருக்கு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்தது.

கணவருடன் அழகுசாதனப் பொருட்களை உருவாக்குதல்: 2012-ல், வினிதா தனது கணவர் கௌசிக் முகர்ஜியுடன் இணைந்து சுகர் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இவர்கள் இருவரும் ஒன்றாக, தைரியமான, அனைத்தும் உள்ளடக்கிய ஒரு அழகுசாதனப் பிராண்டை உருவாக்கினர். இது இந்திய நுகர்வோர் மத்தியில் விரைவாக பிரபலமடைந்தது. கணவன், மனைவியின் கூட்டு முயற்சியால் சுகர் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனம் ரூ.4,000 கோடி மதிப்புள்ள லாபகரமான நிறுவனமாக மாறியது.

இன்று, வினிதா சிங் சுகர் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மட்டுமல்ல; ஆர்வமுள்ள இளம் தொழில்முனைவோருக்கு உத்வேகமாகவும் உந்துசக்தியாகவும் இருக்கிறார். ரூ.300 கோடி சொத்து மதிப்பைக் கொண்ட வினிதா, தனது விடாமுயற்சி மற்றும் ஆற்றலைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதோடு, வரக்கூடிய சவால்கள் வெற்றிக்கான படிக்கட்டுகள் மட்டுமே என்பதையும் நிரூபித்து வருகிறார்.



Source link