சாதாரண சோடா கடையாக தொடங்கி தற்போது ரூ.3,000 கோடி சந்தை மூலதனத்துடன், அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் இந்திய ஐஸ்கிரீம் பிராண்ட் என்ற பெருமையை பெற்றுள்ள வடிலால் ஐஸ்கிரீம் நிறுவனம் பற்றிய விரிவான தகவலை இங்கே பார்ப்போம்.

முதலில் தெருவோர சோடா கடையாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது ரூ.1,900 கோடி மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்ஜியமாக உருவாகி இருக்கும் வடிலால் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் முன்கதை மற்றும் அதன் தற்போதைய தொழிலை கவனித்துவரும் அவர்களின் 5-வது தலைமுறை, மற்றும் வெற்றிக்கு வித்திட்ட உழைப்பு மற்றும் புதுமை ஆகியவை நமக்கு ஊக்கத்தை அளிக்கலாம்.

விளம்பரம்

தற்போது பிரபலமாக இருக்கும் பல இந்திய பிராண்டுகள், அதன் தொடக்க காலத்தில் பல்வேறு போராட்டங்களை தாண்டியே தங்களை நிரூபித்துள்ளன. அந்த வகையில், வட இந்தியாவில் பிரபலமான வடிலால் ஐஸ்கிரீமும் ஒன்று. ஒரு சிறிய முயற்சியாக பெட்டிக் கடையாக தொடங்கப்பட்டு, தற்போது அனைத்து வீடுகளிலும் ஒலிக்கும் ஓர் பெயராக அதனை மாற்றியிருக்கிறார் அதன் நிறுவனர் வடிலால் காந்தி.

1907ஆம் ஆண்டில், ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த வடிலால் காந்தி, சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய காலத்தில் அகமதாபாத்தில் ஒரு சிறிய கடையில் சோடா விற்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவரது கடை குஜராத் முழுவதும் பிரபலமடைந்ததால், அவர் ஐஸ்கிரீமுடன் சோடாவை இணைத்து, ஐஸ்கிரீம் சோடா என்கிற புதிய முயற்சியை அறிமுகப்படுத்தி பரிசோதனை செய்யத் தொடங்கினார். இதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

விளம்பரம்

இதையடுத்து 1926இல், வடிலால் தனது முதல் பிரத்யேக ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தை தொடங்கினார். பின்னர், இந்த தொழில் வடிலாலின் மகன் ராஞ்சோட் லால் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஜெர்மனியில் இருந்து ஒரு ஐஸ்கிரீம் இயந்திரத்தை இறக்குமதி செய்து அதன் எல்லைகளை விரிவுபடுத்தினார். ரஞ்சோட் லாலின் தலைமையின் கீழ், குடும்ப தொழில் ஏற்றம் கண்டது.

1970களில், ராஞ்சோட் லாலின் மகன்களான ராம்சந்திரா மற்றும் லக்ஷ்மண் காந்தி, குஜராத்தில் பிராண்டின் இருப்பை உறுதிப்படுத்தி, அகமதாபாத்தில் 10 வடிலால் ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்களை நிறுவினர். எனினும், நிறுவனம் வடிலால் ஐஸ்கிரீமுடன் நிற்கவில்லை. அடுத்ததாக, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இவர்களின் கவனம் திரும்பியது. குறிப்பாக, முன் சமைத்த குழம்புகள், ரொட்டி மற்றும் பல்வேறு சைவ தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

விளம்பரம்

இன்று, இந்த குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை வாரிசான கல்பித் காந்தி, தலைமை நிதி அதிகாரியாக (CFO) பணியாற்றுகிறார். மேலும் இவர் நிறுவனத்தை புதிய பிராந்தியங்களுக்கும் வழிநடத்துகிறார். அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் இந்திய ஐஸ்கிரீம் பிராண்ட் என்ற பெருமையையும் வடிலால் பெற்றுள்ளது.

இதையும் படிக்க:
பயன்படுத்திய மற்றும் புதிய கார்களுக்கான கடன்கள்: உங்களுக்கான சிறந்த ஆப்ஷன் எது?

1907இல் தெருவோர சோடா கடையாக அதன் சாதாரண தொடக்கத்திலிருந்து, வடிலால் இந்தியாவின் ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையில் நம்பகமான பெயராக வளர்ந்தது. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூ.3,000 கோடியாக உள்ளது. மேலும் இந்த பிராண்ட் புதுமை, விடாமுயற்சி மற்றும் குடும்பத்தால் இயக்கப்படும் மரபு ஆகியவற்றின் சக்திக்கு சான்றாக நிமிர்ந்து நிற்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

விளம்பரம்

.



Source link