காவேரி கார்னர், இத கோலிவுட் கார்னர்ன்னு கூடசொல்லலலாம். நம்ம இன்னைக்கு பார்க்குற எத்தனையோ சினிமா ஆளுமைகளின் துவக்கப் புள்ளியா இந்த டீக்கடை இருந்திருக்குன்னு சொன்னா நம்ப முடியுதா?ஆம், சாலிகிராமம் அருணாச்சாலம் சாலையில் பிரசாத்ஸ்டியோ எதிரில் அமைந்துள்ளது இந்த கடை.
தமிழின் பெரும்பாலான திரைப்படங்களின் படப்பிடிப்புபிரசாத் ஸ்டியோவில் நடப்பதால் அதில் வேலைப்பார்க்கும் கலைஞர்கள் & சினிமா வாய்ப்பு தேடுபவர்களென எல்லாருக்குமான ரீலாக்சேசன் ஸ்பாட் என்றால் நிச்சயம் அது காவேரிகார்னராக தான் இருக்கமுடியும்.பிரம்மாண்டங்களின்உச்சமாக பார்க்கப்படும் சினிமாவின் இன்னொருபக்கத்தை நீங்கள் காவேரி கார்னரை கடக்கும் போது பார்க்கலாம். கண்களில் தீரா கனவுடன் நாளை நாமும் வெள்ளித்திரையில் மின்னப் போகிறோமென்ற நம்பிக்கையோடு வறுமையின் பிடியிலும் “டீயை குடித்துக்கொண்டே “அந்த டைரக்டர் நாளைக் குஷுட்டிங்க் வர சொல்லிருக்காரு” ,“இன்னும் நாளுஷூட்டிங் போனா ரூமுக்கு வாடகை கொடுத்திருவேன்” ,“final draft முடிஞ்சுது நாளைக்கு அந்த புரோடியசரை பார்க்கனும்” என ஒவ்வொரு நாளும் வெற்றி குறித்தான கனவுகளில் இன்றைய சிரமமங்களை எண்ணாத அவர்களின்உரையாடல்கள் ஒரு எதார்த்த சினிமா “காவேரி கார்னர் நாங்க இத காவேரிக்கரைன்னு சொல்லுவோம்.
ஏன்னா சினிமாத்துறை நண்பர்கள்சந்திக்குற இடம் இதுதான்…சினிமாவுல ஜெயிச்சவங்கவாய்ப்பு தேடுறவங்கன்னு. இத கிராஸ் பண்ணாம போயிருக்க மாட்டங்க.அந்தளவுக்கு நெருக்கமான கடை இது. ஏதாச்சும் அறிமுகம் தேவப்ட்டாக் கூட இங்க வந்தா நிச்சயம் கிடைச்சுரும் என்ன படம்? எந்த டீம்? எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுப்போம். டீயைக் குடிச்சுக்கிட்டே கனவுகளோட திட்டமிட்டு யோசிச்சுக்கிட்டு இருப்போம். சினிமாவுலேயே மூணு குருப் இருக்கு A குருப்இ ஆழ்வார்ப்பேட்டைமணிரத்னம் சார் மாதிரி படங்கள் எடுக்குறவங்க, அதுல நடிக்குறவங்க. B குருப் வளசரவாக்கம் குருப்நாங்க C குருப் ஒவ்வொரு நாளு சூட்டிங்களுல எல்லாம் வாழ்வாதாரம தேடிக்கிறவங்க என வருத்ததோடு பகிர்ந்துக்கொண்டார் நடிகர் ஆனந்த் தொடர்ந்து பேசிய இணை இயக்குனர் பாபு “25 ஆண்டுகாலமா தமிழ்திரைப்படத் துறையில் போராடுற இணை இயக்குனர் தான் நான்.
இந்த கடைய பத்தி சொல்லனும்னா முன்னாடி எப்படிAVM உருண்டைய ஏக்கத்தோடு பார்த்துக்கிட்டே நின்னாங்களொ அதே மாதிரி இப்போ இந்த காவேரிகார்னர்ல நின்னு சினிமா கனவ தொட முயற்சி பண்றாங்க நண்பர்களை சந்திக்குறப்போ எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் வெளிய தெரியாது இங்க வந்தா அன்னைக்கு நிச்சயம் ஒரு புது அறிமுகம் கிடைக்கும். நம்ம ஜெயிச்சுட்டு ஒரு நாள் இதேக் கடைக்கு வரனும்ங்கிற நம்பிக்கையில தான் ஓடிக்கிட்டு இருக்கோம்.
இன்னைக்கு டீ க்கூறித்தான பல பகிர்வுகளைநம்மால் பார்க்க முடியும்.எல்லாருக்கும் பிடித்தமான,‘Stress Buster Symbol ஆ டீ மாறிடுச்சு.ஆனா உண்மையை சொன்னா மதிய பசியை மறந்துடீக்குடிச்சுக்கிட்டே இவர்களுக்கு பரிமாறப்படும் சினிமாவிவதாங்கள் நீங்கள் பார்க்காத தமிழ் சினிமாவின்இன்னொரு முகம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.