நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த திருமணம் சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
பாரம்பரிய முறைப்படி இந்த திருமணத்தை நடத்துவதற்கு இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். தெலுங்கு பிராமண கலாச்சார பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த தம்பதியின் திருமணம் நடைபெறும் என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மணமக்களான நாக சைதன்யாவும் சோபிதாவும் இந்த முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என விரும்பியுள்ளனர். நடிகை சோபிதா திருமணத்திற்காக காஞ்சிபுரம் பட்டு புடவையை தேர்வு செய்து, அவற்றை அதனை தங்க ஜரிகையால் அலங்கரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதே போன்று தனது ஆபரணங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அவர் தேர்வு செய்துள்ளார். இந்த திருமணத்தில் இரு வீட்டார் உடைய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே நாக சைதன்யா-சோபிதாவின் திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
திருமண அழைப்பிதழை பாரம்பரிய முறைப்படி வடிவமைத்துள்ளார்கள். அழைப்பிதழின் டிசைனும் மிக அழகாக உள்ளது. ஒரு கூடையில் ஒரு துண்டு துணி, ஒரு மரச்சுருள், இனிப்பு, மிட்டாய்கள் உள்ளிட்டவைகள் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழ், அழைப்பிதழில் கோவில்கள், மணிகள், வாழை மரங்கள் மற்றும் ஒரு பசுவுடைய படம் இடம்பெற்றிருக்கிறது.
.