12 வருஷம் 2 மாதம் கழித்து தனது பழைய நண்பர் ஒருவரை நேரில் வரவழைத்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’.

‘ரங்கூன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. ரிலீசுக்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலைப் பெற்று, பார்வையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

விளம்பரம்

‘அமரன்’ படக் குழுவினருக்கு முதலமைச்சர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் பாராட்டுத் தெரிவித்தனர். ‘அமரன்’ படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ. 302 கோடியை குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக விஜயின் தி கோட் படத்துக்கு அடுத்தபடியாக அமைந்தது.

தொடர்ந்து 25 நாட்களை கடந்து இப்படம் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிவரும் நிலையில், நடிகர் மற்றும் த.வெ.க. தலைவர் விஜய், அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

விளம்பரம்

இது தொடர்பான புகைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கூடவே, விஜய்யுடன் எடுத்த பழைய புகைப்படத்தையும் பகிர்ந்து, “இரண்டு புகைப்படத்திற்கும் 12 வருஷம் 2 மாசம் 1 நாள் 15 மணி நேரம் இடைவெளி” என அமரன் படத்தில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனை பார்த்து கூறுவது போல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘நன்றி விஜய் சார், உங்களுக்காக நான் தினமும் பிரார்த்தனை செய்வேன்’ என்றும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

முன்னதாக, ராஜ்குமார் பெரியசாமி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் என்பதும், அந்த வகையில், ஏ.ஆர்.முருகதாஸும் – விஜயும் இணைந்திருந்த துப்பாக்கி படத்தில் ராஜ்குமார் பெரியசாமி உதவி இயக்குநராக பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.





Source link