கத்தி முனையை விட பேனா வலிமையானது என்பது பழமொழி. ஏனெனில் பேனாவின் எழுத்துக்களே சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றம் உண்டாக்கும் சக்தி கொண்டது. சமூக மாற்றத்திற்குக் காரணம் பேனாவின் எழுத்துக்கள் என்றால் பேனாவின் சக்திக்குக் காரணம் அதிலுள்ள நிப்புகள். அத்தகைய நிப்புகளை இந்தியா முழுவதும் சப்ளை செய்து, சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்த நகரம் தான் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர்.

பட்டாசுக்கும், தீப்பெட்டிக்கும் பெயர் போன சாத்தூர் பேனா நிப்புக்கும் பெயர் பெற்றதாகும். 21ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சாத்தூரில் செழித்தோங்கி இருந்த நிப் தயாரிக்கும் தொழில் தற்போது பூதக்கண்ணாடி கொண்டு தேடும் அளவிற்குத் தான் உள்ளது.

விளம்பரம்

சாத்தூர் நிப் தொழிற்சாலையைத் தேடிய பயணத்தில் சாத்தூர் நடராஜ் திரையரங்கு அருகில் இன்னும் ஒரேயொரு நிப் தொழிற்சாலை உள்ளது என அறிந்து அங்கு சென்றோம். சாத்தூரின் கடைசி நிப் தொழிற்சாலையான இது தற்போது ஒரேயொரு நபரின் உழைப்பால் தன் இயக்கத்தை இழுத்து பிடித்துக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: மிரள வைக்கும் மிக் போர் விமானம்… சாலையில் செல்வோரையும் ஷாக் ஆக்கும் காட்சி…

இதுகுறித்து நிப் தயாரிக்கும் தொழிலாளி மாரியப்பன் கூறுகையில், “நான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிப் தொழில் செய்து வருகிறேன். சாத்தூர் என்றாலே நிப் தொழில் தான் என்ற காலம் போய் இன்று இந்த ஒரேயொரு கம்பெனி தான் இயங்கி வருகிறது.

விளம்பரம்

நிப் தொழிலிலிருந்து பலர் பட்டாசு, தீப்பெட்டி என வேறு வேலைக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் எனக்கு நிப் தொழிலைத் தவிர எதுவும் தெரியாது என்பதால் இதில் வரும் வருமானம் போதவில்லை என்றாலும் செய்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் சாத்தூரில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடன், 2000ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய நிப் தயாரிப்பு தொழில் இன்று ஒரேயொரு தொழிற்சாலையுடன் அடங்கி விட்டது. சாத்தூர் நிப்பின் இந்த வீழ்ச்சிக்கு சீனாவிலிருந்து வந்த பால் பாயிண்ட் பேனாவும், ஒருமுறை உபயோகம் செய்யக்கூடிய மை பேனாவும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: கொஞ்சுத் தமிழ் பேசி வியக்க வைக்கும் சீனாக்காரர்… 70 ஆண்டைக் கடந்து மலைக்க வைக்கும் கடை…

எது எப்படியோ சாத்தூர் நிப் அடுத்த பரிமாணத்திற்குத் தன்னை மாற்றிக்கொள்ளாததும் ஒரு காரணம் தான். அதன் விளைவு தான் சாத்தூரின் கடைசி நிப் தொழிற்சாலை. அதன் நிலையும் அணையும் விளக்கு தான் இதுவும் இல்லை என்றால் வரும் காலத்தில் சாத்தூரில் நிப் செய்யப்பட்டது என்பது வெறும் கதையாகத் தான் இருக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.



Source link