ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நிதீஷ் குமார் 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் எடுத்தனர். 150 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், இந்தப் போட்டியில் இந்திய அணி தடுமாறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி மட்டும் 21 ரன்களை எடுத்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
என்னா அம்பயரிங் இது.. கே.எல்.ராகுல் அவுட்டை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்

இந்த நிலையில், 30ஆவது ஓவரில் ஹர்ஷித் ராணா வீசிய பவுன்சர் பந்து மிட்செல் ஸ்டார்க்கை திணறடித்தது. அந்தப் பந்து அவரது பேட்டில் பட்டு கல்லி பீல்டரை நோக்கிச் சென்றது. உடனே ஸ்டார்க் “நான் உன்னை விட வேகமாக பந்து வீசுவேன். எனக்கு நினைவாற்றல் அதிகம்” எனத் தெரிவித்தார்.

இதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அதிக வேகத்தில் வீசுவார் என மறைமுகமாக எச்சரிக்கை கொடுக்கும் விதமாக இது உள்ளது. மிட்செல் ஸ்டார்க் மற்றும் நிதீஷ் ராணா ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

ஆஸ்திரேலிய அணி 51.2 ஓவர்களில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை 46 ரன்கள் முன்னிலையுடன் தொடங்குகிறது.

.





Source link