இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை பெறும் என கூறப்பட்டிருந்தது.

விளம்பரம்

இந்த நிலையில் இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய துவக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். பிறகு வந்த படிக்கல்லும் டக் அவுட் ஆக, கவனம் விராட் கோலியின் பக்கம் திரும்பியது.

இதையும் படிக்க:
கடந்த 77 ஆண்டுகளில் ஒரே வெற்றி… கவலையளிக்கும் இந்தியாவின் மோசமான சாதனை!

தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, மளமளவென விக்கெட்டுகள் சரிந்தது. கே.எல்.ராகுல் மட்டும் ஆறுதலளிக்கும் வகையில் 26 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் – நிதீஷ் குமார் ரெட்டி ஜோடி இணைந்து 50 ரன்கள் எடுத்தது தான் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இருவரும் ஆஸ்திரேலியா வீரர்களின் சாமர்த்திய பந்துவீச்சில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தார்கள். இதனால் இந்திய அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது.

விளம்பரம்
தோல் மற்றும் முகத்தில் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையின் 7 எச்சரிக்கை அறிகுறிகள்.!


தோல் மற்றும் முகத்தில் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையின் 7 எச்சரிக்கை அறிகுறிகள்.!

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ், மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வரும் ஆஸ்திரேலியா தற்போது 14 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

.



Source link